'எனக்கு ஒரு துணை வேண்டும், ஆனால் திருமணம் வேண்டாம்' - நடிகை ஓபன் டாக்

தனக்கு ஒரு துணை வேண்டும் என்றும் ஆனால் அதை திருமணம் மூலம் பெற விரும்பவில்லை என்றும் பிரபல மலையாள நடிகை ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

Written by - Sudharsan G | Last Updated : Apr 22, 2023, 12:51 AM IST
  • ஹனி ரோஸ் குறுகிய காலத்தில் அதிக கவனத்தை ஈர்த்தவர்கள்.
  • வேறொருவரின் திருமணத்திற்கு செல்வதில் ஆர்வம் இல்லை - ஹனி ரோஸ்
'எனக்கு ஒரு துணை வேண்டும், ஆனால் திருமணம் வேண்டாம்' - நடிகை ஓபன் டாக் title=

மலையாள நட்சத்திர நடிகை ஹனி ரோஸ் மிகக்குறுகிய காலத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் எனலாம். மலையாள படமான 'பாய் பிரெண்ட்' மூலம் அறிமுகமான ஹனி ரோஸ், தற்போது இந்திய அளவில் ஜொலித்து வருகிறார். நீண்ட காலமாக திருமணம் செய்துகொள்ளாமல் ஹனி ரோஸ் வாழ்ந்து வருகிறார்.

அவர் முதன்முதலாக திருமணம் குறித்த தனது மௌனத்தை கலைத்து, திருமணம் குறித்து பேசியதுடன், சில சுவாரஸ்யமான கருத்துக்களையும் பகிர்ந்துள்ளார். தன் வாழ்க்கைத் துணை மற்றும் திருமணம் குறித்து தாராளமாகப் பேசிய அவர், வாழ்க்கையில் ஒரு முறையாவது காதலிக்க வேண்டும் என ஆசைப்பட்டதாகவும், ஆனால் இதுவரை தனக்கு அந்த அதிர்ஷ்டம் கிடைக்கவில்லை என்றும் கூறியுள்ளார். 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Honey Rose (@honeyroseinsta)

மேலும் படிக்க | பொன்னியின் செல்வன் பட நடிகை வீட்டில் திருட்டு... அதுக்கு அவர் போட்ட ட்வீட் இருக்கே!

ஆனால், தனக்கு திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லை என்றும் சிறுவயதிலிருந்தே தனக்கு திருமணத்தில் ஆர்வம் இல்லை என்றும் நடிகை கூறினார். முன்பெல்லாம் 'ஐ லவ் யூ' என்ற வார்த்தையைக் கேட்டால் கோபம் வரும். பின்னர் அது மாறவிட்டது. பிரச்னைகள் பிடிக்காததால் திருமணம் குறித்து யோசிப்பதில்லை என்று ஹனி ரோஸ் கூறியுள்ளார்.

"வேறொருவரின் திருமணத்திற்கு செல்வதில் ஆர்வம் இல்லை. இதுவரை நான் யாரையும் மகிழ்ச்சியாக திருமணம் செய்து பார்த்ததில்லை. எனக்கு ஒரு துணை வேண்டும், ஆனால் அதை திருமணம் மூலம் பெற விரும்பவில்லை. தற்போது ஹேனி ரோஸ், மலையாள சினிமாவில் ஜொலித்து வருகிறார். அவருக்கு சமூக ஊடகங்களிலும் அதிக பாலோயர்ஸ் உள்ளனர்.

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Honey Rose (@honeyroseinsta)

மம்முட்டி, மோகன்லால் போன்ற சூப்பர் ஸ்டார்களுடன் நடித்த ஹனி ரோஸ் தற்போது தென்னிந்திய படங்களில் பிஸியாக இருக்கிறார். சமீபத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்த வீர சிம்ஹா ரெட்டி படத்தில் ஹனி ரோஸ் நடித்தார். அவரின் சமீபத்திய அழகு கடை திறப்பு விழாவின் படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

மேலும் படிக்க | தனிவிமானம்..வீடுகள்..கார்கள்..பிசினஸ்..தலைச்சுற்ற வைக்கும் நயன்தாரா சொத்து மதிப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News