தளபதி விஜய் (Vijay) நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) இயக்கிய உள்ள திரைப்படம் மாஸ்டர் (Master). விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடித்துள்ள 'மாஸ்டர்' படத்தின் டீசர் நேற்று மாலை 6 மணிக்கு யு டியுபில் வெளியானது.
இப்படத்தில் விஜய் (Vijay) கல்லூரி பேராசிரியராக நடித்துள்ளார். படத்தில் அவருக்கு வில்லனாக நடிகர் விஜய்சேதுபதி நடித்துள்ளார். மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் ஷாந்தனு,"கைதி" பட புகழ் அர்ஜூன் தாஸ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைப்பில் வெளியான அனைத்துப் பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், "வாத்தி கம்மிங்" பட்டித் தொட்டியெல்லாம் பரவி பட்டையை கிளப்பியது.
ALSO READ | மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'மாஸ்டர்' படத்தின் மாஸ் அப்டேட் இங்கே, ரசிகர்கள் உற்சாகம்!
கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன் காரணமாக பட வெளியீடு தள்ளிப்போனது. இதனால் மாஸ்டர் படம் ஓடிடி தளத்தில் வெளியாகுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் விஜய் ரசிகர்கள் மாஸ்டர் படமானது நிச்சயம் திரையரங்கில் மட்டுமே வெளியிடப்பட வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதனைத்தொடர்ந்து பேட்டியளித்த படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜூம் படம் நிச்சயமாக திரையரங்கில் மட்டுமே வெளியாகும் எனக் கூறினார்.
இந்நிலையில் 'மாஸ்டர்' (Master) படத்தின் டீசர் நேற்று மாலை 6 மணிக்கு யு டியுபில் வெளியானது. இந்த டீசர் 78 நிமிடங்களில் 1 மில்லியன் லைக்ஸ் சாதனையைப் படைத்துள்ளது. ஒரு திரைப்பட டீசர் இவ்வளவு விரைவாக இந்த சாதனையை உலக அளவில் முதல் முறையாக படைத்துள்ளது என விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளார்கள். தற்போது வரை 'மாஸ்டர்' டீசர் யு டியூப் டிரெண்டிங்கில் முதலிடத்திலும், 1 கோடியே 44 லட்சம் பார்வைகளையும், 1.6 மில்லியன் லைக்குகளையும் பெற்றுள்ளது.
ALSO READ | ரசிகர்கள் செம ஹாப்பி..!! தீபாவளி நாளில் வெளியான மாஸ்டர் பட டீசர்