தல அஜித் நடிக்கும் 'விவேகம்' படம் ஆகஸ்ட் 24-ல் வெளியீடு

Last Updated : Jul 31, 2017, 09:09 PM IST
தல அஜித் நடிக்கும் 'விவேகம்' படம் ஆகஸ்ட் 24-ல் வெளியீடு title=

வரும் ஆகஸ்ட் 24-ம் தேதி 'விவேகம்' படம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இயக்குனர் சிவா-அஜித் காம்போவில் பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் படம் விவேகம். அனிருத் இசையமைக்கிறார். விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். 

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் மற்றும் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோக்கள் ஏற்கனவே வெளியாகி வைரலாகி இருந்தன. அதேபோல், இப்படத்தின் மூன்று பாடல்கள்(சர்வைவா, தலைவிடுதலை, காதலடா) வெளியாகி செம ஹிட் ஆனது.

‘விவேகம்’ படத்தின் விநியோக உரிமையை கைப்பற்ற விநியோகஸ்தர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவி வந்தது.

இந்நிலையில், படத்தின் இறுதி கட்ட பணிகள் முடிவடைந்த நிலையில், தணிக்கை குழுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இன்று இப்படத்திற்கு ‘யு/எ’  சான்றிதழ் வழங்கியுள்ளது.

வரும் ஆகஸ்ட் 24-ம் தேதி இப்படம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Trending News