இணையத்தில் வைரலாகும் வலிமை அஜித் புகைப்படங்கள்

வலிமை திரைப்படத்தின் அஜித்தின் சில புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 14, 2021, 06:59 AM IST
இணையத்தில் வைரலாகும் வலிமை அஜித் புகைப்படங்கள் title=

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் வலிமை (Valimai). இந்த படத்தை போனி கபூர் தயாரித்து உள்ளார். இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா, இசையமைப்பாளராக யுவன் ஆகியோர் பணிபுரிந்துள்ளார்.

அஜித்துக்கு (Ajith Kumar) ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடிக்கின்றனர். இதற்கிடையில் நீண்ட போராட்டத்திற்கு பிறகு ஒரு வழியாக சமீபத்தில் வலிமை (Valimai) படத்தின் ஷுட்டிங்கை முடித்து, இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இரவு பகலாக நடைபெற்று வருகிறது.

ALSO READ | வலிமை படத்தின் மற்றொரு போஸ்டர் வெளியாகிறது; படக்குழு கூறுவது என்ன

இதற்கிடையில் படத்தின் போஸ்டர்கள் மற்றும் முதல் சிங்கிள் பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், வலிமை திரைப்படம் வரும் 2022-ம் ஆம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்த அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

வலிமை படத்தின் BTS ஃபோட்டோக்கள், எக்ஸ்க்ளூசிவ் ஸ்டில்ஸ் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் தூண்டி வருகிறது. இந்த ஃபோட்டோக்களில் காணப்படும் வலிமை செட்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. சமீபத்தில் அஜித் குடும்பத்துடன் கோயிலில் இருப்பது, பைக்கில் வருவது போன்ற ஸ்டில்கள் வெளியாகின.

இந்நிலையில் வலிமை திரைப்படத்தின் அஜித்தின் சில புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன.

 

 

இதற்கிடையில் இந்த படத்தில் அஜித், முரட்டு சிங்கிள் ரோலில் தான் வலிமை படத்தில் நடித்துள்ளாராம். இந்த தகவலை டைரக்டர் ஹச்.வினோத்தும் உறுதி செய்துள்ளார்.

ALSO READ | Valimai Update: ஐதராபாத்தில் மீண்டும் வலிமை படப்பிடிப்பு தொடங்கியது

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News