வாவ்..சிக்ஸ் பேக்குடன் மாஸ் காட்டும் தனுஷ் பட நடிகை: போட்டோ வைரல்

சமீப காலமாக நடிகை டாப்ஸி பன்னு தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ஜிம் பயிற்சியாளரான சுஜீத் கர்குட்கருடன் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 13, 2023, 10:49 AM IST
  • டாப்ஸி பண்ணு 5 வருடமாக முயற்சி செய்து வருகிறார்.
  • ஸ்டீராய்டுகளை பயன்படுத்தியதில்லை.
  • நடிகை டாப்ஸி சிக்ஸ் பேக் உடற்கட்டில் தோன்றியுள்ளார்.
வாவ்..சிக்ஸ் பேக்குடன் மாஸ் காட்டும் தனுஷ் பட நடிகை: போட்டோ வைரல் title=

டாப்சி பன்னு  இந்தியத் திரைப்பட நடிகை, வடிவழகியாக இருந்து பின்னர் நடிகையானவர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், மற்றும் இந்தித் திரைத்துறையில் தற்போது பணியாற்றி வருகிறார். 2010 இல் சும்மாண்டி நாதம் என்னும் தெலுங்குத் திரைப்படம் மூலம் திரைத்துறையில் நுழைந்தார். பின்னர் 2011 ஆம் ஆண்டு இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் படம் மூலம் தமிழில் இவர் அறிமுகமானார். இந்தப் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தார் டாப்ஸி. இதனை தொடர்ந்து இவர் வந்தான் வென்றான், கஞ்சனா 2 கேம் ஓவர் என போன்ற தமிழ்த் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். தற்போது இவர் பாலிவுட் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் இவர் நடித்த, ’பிங்க்’, ’நாம் ஷபானா’ ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து இவர் பல இந்தி படங்களில் நடித்து இருக்கிறார். இதனை தொடர்ந்து சமீப காலமாகவே நடிகை டாப்ஸி நடிகைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

மேலும் படிக்க | 26 வயது நடிகை உயிரிழப்பு... துக்கத்தில் கொரியன் சீரிஸ் ரசிகர்கள்!

இந்நிலையில் தற்போது தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ஜிம் பயிற்சியாளரான சுஜீத் கர்குட்கருடன் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில், நடிகை டாப்ஸி சிக்ஸ் பேக் உடற்கட்டில் தோன்றியுள்ளார். அந்த பதிவில் "பல மாதங்களாக கிரில்லிங் மற்றும் கடின உழைப்பால் மட்டுமே நான் பிஸ்கட் சாப்பிட முடியும். சுஜித்  டீ சாப்பிட முடியும். சுஜித் நீங்கள் இறுதியாக இந்த படத்தைப் பெற்றுள்ளீர்கள், நான் எனது சோலே பத்தூரையும் குரோசண்ட்ஸையும் சாப்பிடப் போகிறேன்". என டாப்ஸி பதிவிட்டுள்ளார்.

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Taapsee Pannu (@taapsee)

 

டாப்ஸி பண்ணு 5 வருடமாக முயற்சி செய்து வருகிறார்
டாப்ஸி பன்னுவின் மாறுதலின் காலம் குறித்து ஜிம் மாஸ்டரிடம் கேட்டபோது, ​​கடந்த ஐந்து ஆண்டுகளாக டாப்ஸியுடன் இணைந்து பணியாற்றி வருவதாக முன்முன் கூறினார். டாப்ஸியின் உருவம் எப்பொழுதும் நன்றாகவும், வடிவமாகவும் இருந்தாலும், இது தவிர, அவர் தனது உடற்தகுதியிலும் அதிக கவனம் செலுத்துகிறார். சிக்ஸ் பேக் ஏபிஎஸ்ஸை அடைய பொதுவாக மூன்று முதல் நான்கு மாதங்கள் வரை அவர்களுடன் பணியாற்ற வேண்டும்.

ஸ்டீராய்டுகளை பயன்படுத்தியதில்லை
டாப்ஸியின் மாற்றத்தில் ஸ்டீராய்டுகளைப் பயன்படுத்தியதில்லை என்றும், பாதுகாப்பான சப்ளிமெண்ட்ஸ் மட்டுமே பயன்படுத்தியதாகவும் கூறினார்.

மேலும் படிக்க | இயக்குநர் லிங்குசாமியின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி! சென்னை நீதிமன்றம் தீர்ப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News