NGK : வெளியானது அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி!!

சூர்யா நடித்துள்ள ‘என்.ஜி.கே.’ படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Last Updated : Mar 25, 2019, 05:54 PM IST
NGK : வெளியானது அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி!! title=

சூர்யா நடித்துள்ள ‘என்.ஜி.கே.’ படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வரும் திரைப்படம் NGK. இத்திரைப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி என இரண்டு கதாநாயகிகள் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். தற்போது இந்தப் படத்தின் தயாரிப்புப் பணிகள் நிறைவடைந்து திரைக்கு வரத் தயாராக உள்ளது.

கடந்த மாதம் 14ம் தேதி  NGK படத்தின் டீசர் வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்த படத்திற்கு தணிக்கைக் குழு U சான்றிதழ் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மே மாதம் 31-ம் தேதி உலகம் முழுவதும் ‘என்.ஜி.கே.’ வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

‘நந்த கோபாலன் குமரன்’ என்பதன் சுருக்கம்தான் ‘என்.ஜி.கே.’ என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News