ஆகஸ்டில் தொடங்குகிறது சுந்தர்.சி-ன் 'சங்கமித்ரா' படப்பிடிப்பு!

வரலாற்று கதையை அடிப்படையாக கொண்டு சுந்தர்.சி இயக்கும் படம் தான் ‘சங்கமித்ரா’. இந்த படத்தை ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறது. இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

Last Updated : Jun 27, 2018, 09:51 AM IST
ஆகஸ்டில் தொடங்குகிறது சுந்தர்.சி-ன் 'சங்கமித்ரா' படப்பிடிப்பு! title=

வரலாற்று கதையை அடிப்படையாக கொண்டு சுந்தர்.சி இயக்கும் படம் தான் ‘சங்கமித்ரா’. இந்த படத்தை ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறது. இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

முதலில் இந்தப் படத்தில் ஸ்ருதி ஹாஸன் ஒப்பந்தமாகியிருந்தார். இதற்காக வாள் சண்டை பயிற்சியெல்லாம் எடுத்துக் கொண்டார். பிறகு சில காரணங்களால் படத்திலிருந்து ஸ்ருதி விலகியதால், M.S.தோனி’ புகழ் தீஷா பதானிக்கு சென்றது. 

மேலும் இந்த படத்தில் ஜெயம் ரவி, ஆர்யா இணைந்து முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் இரண்டு பாகங்களாக உருவாகிறது.

இந்நிலையில் சங்கமித்ரா வேலைகளில் சுந்தர் சி மும்முரமாக ஈடுப்பட்டு வருவதாகவும், வரும் ஆகஸ்டில் படப்பிடிப்பு ஆரம்பிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. 

Trending News