Janhvi Kapoor Marriage : தமிழ் திரையுலகில் மட்டுமன்றி ஒட்டுமொத்த இந்திய திரையுலகிற்குமே மறக்க முடியாத நாயகியாக இருப்பவர், ஸ்ரீதேவி. இவருக்கு ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் என இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இருவருமே திரையுலகின் செல்லக்குழந்தைகளாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.
ஸ்ரீதேவியின் இரு மகள்கள்..
நடிகை ஸ்ரீதேவி, பாலிவுட் திரையுலகில் பிரபலமான தயாரிப்பாளராக இருக்கும் போனி கபூரை 1996ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு, அடுத்த ஆண்டே ஜான்வி கபூர் என்ற மகள் பிறந்தார். இதையடுத்து 2000ஆம் ஆண்டு, குஷி கபூர் என்ற இன்னொரு மகள் பிறந்தார். இவர், தற்பாேதுதான் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்திருக்கிறார்.
ஜான்வி கபூருக்கு தற்போது 27 வயதாகும் நிலையில் பாலிவுட் மட்டுமன்றி தெலுங்கு சினிமாவிலும் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கிறார்.
தெலுங்கில் எண்ட்ரி கொடுக்கும் ஜான்வி கபூர்..
நடிகை ஜான்வி கபூர், 2018ஆம் ஆண்டு தடக் எனும் படம் மூலம் திரையுலகிற்குள் அறிமுகமானார். தொடர்ந்து கோஸ்ட் ஸ்டோரீஸ், குஞ்சன் சக்சேனா:தி கார்கில் கேர்ள், ரூஹி, மில்லி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். இப்படங்களில் பல, ஹிட் அடித்துள்ளன. இவர், தற்போது தெலுங்கில் எண்ட்ரி கொடுக்க இருக்கிறார். கொரட்டாலா சிவா இயக்கி வரும் ‘தேவாரா: பாகம் 1’ படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தில், அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் ஜான்வி கபூர்.
மேலும் படிக்க | Jailer 2 Update : 'ஜெயிலர் 2' படத்தின் முக்கிய அப்டேட்... இதுதானா டைட்டில்
ஜான்வியின் காதலர்..
ஜான்வி கபூர், ஷிக்கர் பகாரியா என்பவரை காதலித்து வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து அவர்கள் பெரிதாக எங்கும் வெளியில் பேசவில்லை என்றாலும், இவர்கள் டேட்டிங் செய்கின்றனர் என்பது அனைவருக்கும் தெரியும். இவர், சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் அவர் பெயர் பொறித்த ஒரு நெக்லஸை பாேட்டுக்கொண்டார். இதனால், இந்த காதலை கிட்டத்தட்ட அனைவருமே இவர்களின் காதலை உறுதி செய்து விட்டனர்.
திருமணம் குறித்து பேசிய ஜான்வி..
நடிகை ஜான்வி கபூர், சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்டார். அப்போது, தனக்கு எங்கு திருமணம் செய்து கொள்ள விருப்பம், எந்த உடையில் திருமணம் செய்து கொள்ள விருப்பம் போன்ற தகவல்கள் பகிர்ந்து கொண்டார்.
அப்போது, தனக்கு திருப்பதியில் திருமணம் செய்து கொள்ள விருப்பம் இருப்பதாக தெரிவித்தார். அது மட்டுமன்றி, இந்த திருமணத்தில் தங்களின் மிக நெருங்கிய நண்பர்களும் உறவினர்களும் மட்டுமே கலந்து கொள்வர் என்றும் கூறினார். தனது திருமணத்தில் தங்க ஜரிகையில் நெய்யப்பட்ட காஞ்சிபுரம் புடவையை கட்டி, தலை நிறைய மல்லிப்பூ வைத்து திருமணம் செய்து கொள்வேன் என்றும் கூறினார். மேலும், தனது கணவர் வேஷ்டி கட்டிக்கொள்ள வேண்டும் என்றும் திருமண விருந்தை வாழை இலையில் சாப்பிடுவோம் என்றும் கூறியிருக்கிறார்.
தமிழ் முறைப்படி திருமணம்..
நடிகை ஜான்வி கபூரின் தாய் ஸ்ரீதேவி, தமிழ்நாட்டை சேர்ந்தவர். தான் இறப்பதற்கு முன்பு, அவர் தனது மகள்கள் திருமணம் குறித்து போனி கபூரிடம் பேசியிருக்கிறார் என்று கூறப்படுகிறது. ஜான்வியின் நேர்காணலை பார்த்த பலர், தனது தாய்க்காக தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக கருத்துகளை கூறி வருகின்றனர்.
மேலும் படிக்க | “#நன்றி கெட்ட ரஞ்சித்” இணையத்தில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்! என்ன விஷயம்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ