மெல்போர்னில் நடைபெற்று வரும் இந்தியத் திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருது சூர்யாவிற்கும், சிறந்த திரைப்படத்திற்கான விருது சூரரைப்போற்று படத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த திரைப்படம் சூரரைப்போற்று. ஏர் டெக்கான் நிறுவனர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படத்தில் அபர்ணா முரளி, ஊர்வசி, கருணாஸ் பல நடிகர்கள் நடித்திருந்தனர். கொரோனா ஊரடங்கில் திரையரங்குகள் மூடப்பட்டிருந்ததால் ஓடிடியில் இப்படம் வெளியானது. இதற்கு அந்த சமயத்தில் திரையரங்கு உரிமையாளர்களிடம் இருந்து மிகப்பெரிய எதிர்ப்பு வந்தது. சூர்யாவின் படங்களை இனி திரையிட மாட்டோம் என திரையரங்கு உரிமையாளர்கள் அறிவித்தனர். தமிழ்,தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் உருவாகிய இப்படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்திருந்தது.
உலக அளவில் கிடைத்த அங்கீகாரம் மாக ஆஸ்கர் விருதின் பொதுப் பிரிவுக்கு சூரரை போற்று படம் தேர்வு செய்யப்பட்டது. பின் ஆஸ்கார் விருதுக்கு தகுதி பெற்ற 366 படங்களிலும் சூரரைப்போற்று திரைப்படம் இடம்பெற்றிருந்தது. ஆனால் இறுதிப் பட்டியலில் இத்திரைப்படம் இடம் பெறாமல் போனது. இதனால் சூர்யா ரசிகர்கள் மிகவும் வருத்தத்தில் இருந்தனர்.
தற்போது மெல்போர்னில் நடைபெற்று வரும் இந்திய திரைப்பட விழாவில் சிறந்த இயக்குனர் பிரிவில் சுதா கொங்கரா பெயரும், சிறந்த நடிகர் பிரிவில் சூர்யா பெயரும் பரிந்துரைக்கப்பட்டது. இந்தியாவிலிருந்து 26 மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட படங்கள் இங்கு திரையிட. அதில் சிறந்த நடிகருக்கான விருது சூர்யாவிற்கும் சிறந்த திரைப்படத்திற்கான விருது சூரரைப்போற்று படத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR