"சோலோ" உருவான வீதம் வீடியோ!

Last Updated : Oct 2, 2017, 05:58 PM IST
"சோலோ" உருவான வீதம் வீடியோ! title=

துல்கர் சல்மான் மற்றும் நேஹா ஷர்மா நடிப்பில், தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளிலும் வெளிவரும் திரைப்படம் 'சோலோ'. ரசிகர்களிடையே மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தின் மேக்கிங் வீடியோ இன்று வெளியானது. 

இந்த வீடியோவினை குறித்து நடிகர் துல்கர் சல்மான் தனது ட்விட்டர் பக்கத்தினில் பதிவிட்டுள்ளார்.

 

 

'சோலோ' ரொமாண்டிக் த்ரில்லர் படமாக உருவாகி உள்ளது. இப்படத்தினை பிஜாய் நம்பியார் இயக்குகிறார். கோவிந்த் மேனன் இசையமைகின்றார். துல்கர் சல்மான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகின்றார். தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் ஒரே நேரத்தில் ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  

இந்நிலையில், இந்தப் படம் உருவான வீதம் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. ஏற்கெனவே இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News