விஜய் டிவிக்கு மீண்டும் செல்லும் நடிகர் சிவகார்த்திகேயன்?

நடிகர் சிவகார்த்திகேயன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'குக் வித் கோமாளி-3' நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள இருக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : May 7, 2022, 06:59 AM IST
  • டான் படம் மே 13ம் தேதி வெளியாக உள்ளது.
  • நேற்று இப்படத்தில் இருந்து ட்ரைலர் வெளியானது.
  • படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
விஜய் டிவிக்கு மீண்டும் செல்லும் நடிகர் சிவகார்த்திகேயன்? title=

சின்னத்திரையில் தனது வாழ்க்கை பயணத்தை தொடங்கி தற்போது பெரிய திரையில் ஜொலித்து கொண்டிருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன்.  விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஸ்டாண்ட் அப் காமெடி செய்து கலக்கினார், அதனை தொடர்ந்து அதே தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வந்தார். பின்னர் ஒரு சில படங்களில் சிறிய வேடத்தில் நடித்தவர் தனது இடைவிடாத முயற்சியினால் வெற்றிபெற்று தற்போது நடிகர், பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமையுடன் திரையுலகில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

மேலும் படிக்க | தனது படத்திற்கு தானே கதை எழுதியுள்ள தமிழ் நடிகர்கள்!

இந்நிலையில் இவர் மீண்டும் விஜய் டிவிக்கு செல்ல இருப்பதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது.  ஆனால் இவர் செல்வது எதற்கென்றால் தான் நடித்து முடித்திருக்கும் டான் படத்தை புரொமோஷன் செய்வதற்கு தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது, இந்நிகழ்ச்சியில் தான் நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று கொண்டு, தனது 'டான்' படத்தினை ப்ரோமோஷன் செய்கிறார், இந்த காட்சி விரைவில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.  மேலும் இதனை உறுதிசெய்யும் விதமாக நடிகர் சிவகார்த்திகேயன் குக் வித் கோமாளி நிகழ்ச்சி நடைபெறும் செட்டில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகியுள்ள 'டான்' படத்தில் இரண்டாவது முறையாக சிவகார்த்திகேயன்-பிரியங்கா அருள் மோகன் ஜோடி இணைந்து நடித்துள்ளது.  காமெடி திரைப்படமான இதில் எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, ஷிவாங்கி, பாலா, சூரி, ஆர்ஜே.விஜய், முனீஷ்காந்த் போன்ற பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.  இந்த படம் மே மாதம் 13ம் தேதி வெளியாகவுள்ளது.  நேற்று டான் படத்தில் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.  

மேலும் படிக்க | அரசியலுக்கு போலா? வெளியானது டான் படத்தின் ட்ரைலர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News