தீபாவளி ரேஸில் “அயலான்”.. மற்றொரு முக்கிய அறிவிப்பும் வெளியீடு

அயலான் ரிலீஸ் குறித்த வதந்திகள், வதந்திகளே! திட்டமிட்டபடி தீபாவளி ரிலீஸுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது. விரைவில் டீசர் வெளிவருமெனவும் இயக்குநர் தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Aug 9, 2023, 11:39 AM IST
  • அயலான் எப்போது ரிலீஸ்?
  • கிராபிக்ஸ் பணிகளால் தாமதம்.
  • சிவகார்த்திகேயன் 21 அப்டேட்.
தீபாவளி ரேஸில் “அயலான்”.. மற்றொரு முக்கிய அறிவிப்பும் வெளியீடு title=

அயலான் படத்தின் முக்கிய அப்டேட் இதோ: தமிழ் திரையுலகில் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி குறித்து அனைவருக்கும் நன்கு தெரியும், எவ்வித திரை பின்புலமும் இல்லாமல் சின்னத்திரையிலிருந்து வந்து தற்போது வெள்ளித்திரையில் தடம் பதித்து ஜொலித்து கொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் வெளியான படங்கள் எல்லாம் பெரும்பாலான குழந்தைகளால் ரசிக்கப்படுகிறது, இவரது நகைச்சுவையான பேச்சிற்கே பல ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அந்த வகையில் தற்போது கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக படப்பிடிப்பு நடந்து வந்த “அயலான்” படம் குறித்து ஒரு முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

அயலான் எப்போது ரிலீஸ்?
ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் 'அயலான்'. இந்த திரைப்படத்தை 24 ஏஎம் ஸ்டுடியோஸ் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். ரகுல் ப்ரீத் சிங், ஷரத் கேல்கர், இஷா கோப்பிகர், பானுப்ரியா, யோகி பாபு, கருணாகரன், பால சரவணன் ஆகியோர் இதில் நடித்துள்ளனர்.

மேலும் படிக்க | காமெடி நடிகருக்கு தீண்டாமை கொடுமை..? கொதித்து போன நெட்டிசன்கள்-விளக்கம் கொடுத்த நடிகர்!

இந்நிலையில் தற்போது அயலான் படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என்றும் படக்குழு அறிவித்திருந்தது. ஆனால், கிராபிக்ஸ் பணிகள் இன்னும் முழுமை அடையாததால் தீபாவளி ரேஸில் இருந்து ‘அயலான்’ படம் விலகுவதாக தகவல் வெளியாது. இதனிடையே இது தொடர்பாக இயக்குநர் தரப்பில் விளக்கம் ஒன்று வெளியிடப்பட்டது. அதன்படி அதில், அயலான் ரிலீஸ் குறித்த வதந்திகள், வதந்திகளே! திட்டமிட்டபடி தீபாவளி ரிலீஸுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது. விரைவில் டீசர் வெளிவருமெனவும் என்று தெரிவித்துள்ளார்.

கிராபிக்ஸ் பணிகளால் தாமதம்
முன்னதாக கிராபிக்ஸ் பணிகளில் ஏற்பட்ட தாமதத்தால் இப்படத்தின் வெளியீடு தொடர்ந்து தள்ளிவைக்கப்பட்டுக் கொண்டே இருந்தது. 4500-க்கும் மேற்பட்ட VFX காட்சிகளைக் கொண்ட இந்திய சினிமாவின் முதல் முழு நீள திரைப்படம் என்பதால் இப்படத்தின் கிராபிக்ஸ் பணிகள் தொடர்ந்து இழுபறியாகவே உள்ளன.

இந்த நிலையில் தற்போது கிராபிக்ஸ் பணிகள் முழு வீச்சில் நடந்து வருவதாகவும் தீபாவளி அன்று திரையிடுவதில் எந்த மாற்றமும் இல்லை என்றும் படக்குழுவினர் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயன் 21 அப்டேட்
இதனிடையே தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் 21வது படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். சிவகார்த்திகேயனின் SK 21 படத்தில் சாய் பல்லவி நாயகியாக நடிக்கிறார், ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். காஷ்மீரில் தொடங்கிய இப்படத்தின் ஷூட்டிங் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வருகிறது. மேலும் SK21 படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டைட்டில் இரண்டுமே சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது.

மேலும் படிக்க | ‘ஜெயிலர்’ படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைப்பு..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News