'கைதி' படத்தின் தொடர்ச்சியா 'விக்ரம்'? லோகேஷின் மல்டிவெர்ஸ் கான்செப்ட்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான 'கைதி' படத்திற்கும், தற்போது வெளியாகவுள்ள 'விக்ரம்' படத்திற்கும் சில ஒற்றுமை உள்ளதாக கூறப்படுகிறது.  

Written by - RK Spark | Last Updated : May 14, 2022, 04:36 PM IST
  • விக்ரம் படம் ஜீன் 3ம் தேதி வெளியாக உள்ளது.
  • இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார்.
  • கைதி படத்தின் தொடர்ச்சியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
'கைதி' படத்தின் தொடர்ச்சியா 'விக்ரம்'? லோகேஷின் மல்டிவெர்ஸ் கான்செப்ட்! title=

பல ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் கமலின் விக்ரம் படம் ஜூன்-3ம் தேதி வெளியாகவுள்ளது, இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நாளைய தினம் நடக்கவிருக்கிறது.  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை கமலின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரித்துள்ளது.  இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி, பஹத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், ஷிவானி, காளிதாஸ் ஜெயராம், மைனா நந்தினி, மகேஸ்வரி போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.  சமீபத்தில் வெளியான இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான பத்தல பத்தல பாடல் நல்ல வரவேற்பை பெற்றது, கமல் எழுதி பாடிய இந்த பாடல் படம் குறித்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

மேலும் படிக்க | 'தளபதி 66' படத்தில் நடிக்கவில்லை என மறுத்த பிரபல நகைச்சுவை நடிகர்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் 2019ம் ஆண்டு வெளியான கைதி படத்திற்கும், தற்போது வெளியாகவுள்ள விக்ரம் படத்திற்கும் சில தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.  'விக்ரம்' படத்தில் சூர்யா ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார் என்கிற செய்தி ஏற்கனவே வெளியானது, இப்படத்தில் சூர்யா அர்ஜுன் தாஸ் மற்றும் ஹரிஷ் உத்தமன் ஆகியோருக்கு முதலாளியாக நடித்திருப்பதாக கூறப்படுகிறது.  அர்ஜுன் தாஸ் மற்றும் ஹரிஷ் உத்தமன் ஆகிய இருவரும் ஏற்கனவே லோகேஷ் கனகராஜின் 'கைதி' படத்தில் நடித்து இருந்தனர்.

அதேபோல நரேன் 'கைதி' படத்தில் போலீசாக நடித்து இருந்தார், தற்போது இவரும் 'விக்ரம்' படத்தில் நடித்து இருக்கிறார்.  இந்த படத்திலும் அவர் 'கைதி' படத்தில் நடித்ததை போல நடித்திருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  அதிகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இப்படத்தில் மேலும் பல சுவாரஸ்யங்கள் ஒளிந்திருப்பதாக கூறப்படுகிறது.  நாளை வெளியாகும் ட்ரைலரில் இதற்கான விடை கிடைக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டுள்ளனர்.  

movies

மேலும் படிக்க | 'ஏகே61' படத்தில் அஜித்துடன் இணையப்போகும் மற்றொரு முக்கியப்புள்ளி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News