15 நாள்களில் திருமணம் டூ பிரிவு... சம்யுக்தா - விஷ்ணுகாந்த் பிரச்சனைக்கு என்ன காரணம்?

Samyuktha - Vishnukanth: திருமணமான சில நாட்களில், பிரபல சீரியல் ஜோடியான சம்யுக்தா மற்றும் விஷ்ணுகாந்த் இருவரும் பிரிந்ததை அடுத்து தற்போது அதுகுறித்த முழு தகவல்களையும் இங்கு காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : May 14, 2023, 05:39 PM IST
  • இவர்கள் சிப்பிக்குள் முத்து என்ற சீரியலில் நடித்தனர்.
  • இருவரும் தங்களது திருமண புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கிவிட்டனர்.
  • திருமணமாகி 15 நாள்களில் பிரிந்துவிட்டதாக தகவல்.
15 நாள்களில் திருமணம் டூ பிரிவு... சம்யுக்தா - விஷ்ணுகாந்த் பிரச்சனைக்கு என்ன காரணம்? title=

Samyuktha - Vishnukanth: விஜய் டிவியில் ஒளிப்பரப்பான சிப்பியின் முத்துவின் தொடர் பலரையும் ஈர்த்தது. இந்த தொடரில் நடித்த விஷ்ணு காந்த், சம்யுக்தா இருவரும் ஜோடி திரையை தாண்டி நிஜ வாழ்க்கையிலும் ஜோடி சேர்ந்தனர். இவர்களின் திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்கள் அதிகம் பகிரப்பட்டது. 

இவருவருக்கும் தொடரின்போது ஏற்பட்ட காதலால், கடந்த மார்ச் மாதம் திருமணம் மேற்கொண்டனர். இவர்களின் திருமண புகைப்படம் வைரலானதை அடுத்து, சக நடிகர்கள், பிரபலங்கள் உள்ளிட்டோரும் சமுக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்திருந்தனர். 

திருமணமும் பிரிவும்

சினிமா நட்சத்திரங்கள், சின்னத்திரை நட்சத்திரங்கள் நிஜ வாழ்விலும் ஜோடி சேர்வது இது ஒன்றும் புதிதல்ல. திருமணம் மட்டுமின்றி பிரிவும், விவாகரத்தும் நட்சத்திரங்கள் இடையில் இயல்பானதாகவே பொதுப்பார்வையில் பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், விஷ்ணுகாந்த் - சம்யுக்தா ஆகியோர் திருமணமாகி வெறும் 15 நாள்களில் பிரிந்துவிட்டதாக கூறப்பட்டது. அவர்களின் திருமண அறிவிப்பே திடீரென வெளியான நிலையில், அவரின் பிரிவு அறிவிப்பும் திடீரென வெளியாகி அதிர்ச்சியளித்துள்ளது. தொடர்ந்து, ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பல ஊகங்களை பதிவிட்டிருந்தனர். 

மேலும் படிக்க | Upasana Kamineni: “இதனால்தான் தாமதமாக தாயாக முடிவு செய்தேன்” அன்னையர் தினத்தில் உண்மையை உடைத்த உபாசனா!

டியர் ஹேட்டர்ஸ்...

இதற்கிடையில், சம்யுக்தா அவர் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில்,"டியர் ஹேட்டர்ஸ், நீங்கள் நினைத்தது நடந்தது, ஆனால், இனி தான் என் வாழ்க்கை ஆரம்பிக்கவே போகிறது. நீங்கள் நினைத்துப் பார்க்காதப்படி எல்லாம் நடக்கும். அதனால் ஏமாற்றத்தைத் தாங்குவதற்குத் தேவையான பலத்தைப் பெறுங்கள்" என பதிவிட்டிருந்தார். இந்த பதிவால் அவர்கள் பிரிந்துவிட்டார்களோ என்ற சந்தேகம் வலுத்தது.  

இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து நடிகர் விஷ்ணுகாந்த் முதன்முதலாக பொதுவெளியில் பதிலளித்துள்ளார். ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில்,"நாங்கள் இருவரும் கடந்த மார்ச் 3ஆம் தேதி திருமணம் செய்துகொண்டோம். பின்னர், மார்ச் 10ஆம் தேதி சென்னை வந்தடைந்தோம். ஆனால் அடுத்த 15 நாட்கள் மட்டுமே சம்யுக்தா எனது வீட்டில் இருந்தார். நான் பொறுமையாக இருக்க வேண்டும் என்று நினைத்து, அவருடைய குடும்ப சூழலைக் கருத்தில் கொண்டும், திருமணச் செலவை நானே ஏற்றுக்கொண்டேன்.

தந்தை தான் அனைத்திற்கும் காரணம்

நான் இத்தனை நாள்கள் பொறுமையாக இருந்ததற்குகான காரணம், இது ஒரு சிறு பிரச்சனை என்று தான் நினைத்திருந்தேன். சம்யுக்தாவின் தந்தை வீட்டை விட்டே போய்விட்டதாக என்னிடம் கூறினர், ஆனால், அவர் தான் எல்லாவற்றுக்கும் காரணம். அவரின் பேச்சைக் கேட்டுத்தான் இப்படி சம்யுக்தா நடந்து கொள்கிறாரோ என்ற சந்தேகம்.

சம்யுக்தா என்னிடம்,'என்னையும் எனது தாயையும் விட்டுட்டு போன தந்தையை திருமணத்திற்கு அழைக்க மாட்டேன். நான் அவரை வீட்டிற்குள் அனுமதிக்க மாட்டேன்' என கூறினார். பிறகு சம்பிரதாயத்திற்கு அழைத்தோம் என்றார். ஆனால் அவர் வந்த பிறகு எல்லாம் மாறிவிட்டது. சம்யுக்தாவிடம் பேச முயற்சிப்பதை அவரின் தந்தை தடுக்கிறார்.

அனைத்தும் 15 நாள்களில்...

சம்யுக்தாவின் தந்தையிடம் இதுகுறித்து கேட்டேன். மேலும், சம்யுக்தாவுக்கும் எனக்கும் பிரைவசியே இல்லை. அப்பாவின் வீடு எங்கள் வீட்டின் அருகில் இருப்பதால், அவர் காலையிலும் மாலையிலும் ஒருமுறை வருவார். அதில் சிக்கல் ஏற்பட்டது. அதன்பிறகு என்னை விட தோழி தான் முக்கியம் என்று சம்யுக்தா கூறியதை அடுத்து பிரச்சினை பூதாகரமாக வெடித்தது. திருமணமான 15 நாட்களுக்குள் இவை அனைத்தும் நடந்துவிட்டது. சம்யுக்தாவிடம் பலமுறை பேச முயற்சித்தேன், ஆனால் அவர் மறுத்துவிட்டார்.

நான் அவரை எந்தவிதத்திலும் துன்புறுத்தவில்லை. பலர் இணையத்தில் இந்த சம்பவத்தை தவறாக சித்தரிக்கின்றனர்" என்று விளக்கமளித்தார். விஷண்காந்தின் இந்த விளக்கத்திற்கு நடிகை சம்யுக்தா விரைவில் பதிலளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இருவரும் தங்களது திருமண புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கங்களில் இருந்து நீக்கியது மட்டுமின்றி, பாலோ செய்வதையும் நீக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | Parineeti Chopra: ‘திருமண மலர்கள் தருவாயா..’ காதலரை கரம் பிடிக்க உள்ள பாலிவுட் நாயகி பரினீதி சோப்ரா!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News