“அவர் நலமுடன் உள்ளார்” சரத்பாபுவின் சகோதரி நடிகரின் நிலை குறித்து விளக்கம்

பிரபல நடிகர் சரத்பாபு இறந்து விட்டதாக நேற்று தகவல்கள் பரவிய நிலையில் அவரது சகோதரி விளக்கம் அளித்துள்ளார். 

Written by - Yuvashree | Last Updated : May 4, 2023, 10:42 AM IST
  • நேற்று நடிகர் மனோபாலா உயிரிழந்த நிலையில் நடிகர் சரத்பாபுவும் இறந்து விட்டதாக தகவல்கள் பரவியது.
  • உடல் நிலை சரியில்லாத காரணத்தால் சரத்பாபு கடந்த மார்ச் மாதம் மருத்துவமனையில் அனுமதி.
  • சரத்பாபுவின் நிலை குறித்த அவரது சகோதரி விளக்கம்.
“அவர் நலமுடன் உள்ளார்” சரத்பாபுவின் சகோதரி நடிகரின் நிலை குறித்து விளக்கம் title=

தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்பட பல மொழி படங்களில் நடித்து பிபரலமான நடிகர் சரத்பாபு. இவர், உடல் நலக்குறைவு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, இவர் உயிரிழந்து விட்டதாக சமூக வலைதளங்கள் முழுவதும் தகவல்கள் பரவியது. 

 

சரத்பாபு:

 

தமிழில் மெகா ஹிட் படங்களான முள்ளும் மலரும், அண்ணாமலை, முத்து உள்ளிட்ட படங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்திருந்தவர் சரத்பாபு. கோலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்கள் மட்டுமன்றி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களிலும் பெரிய ஹீராேக்களுடன் இவர் இணைந்து நடித்துள்ளார். 70’ஸ் ஹீரோக்கள் முதல் இப்போது முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள் வரை அனைவருடனும் நடித்தவர் சரத்பாபு. 

 

சரத்பாபு இறந்ததாக வதந்தி:

 

பிரபல நடிகர் சரத்பாபு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று உயிரிழந்து விட்டதாக சமூக வலைதளங்கள் முழுவதும் தகவல்கள் பரவியது. நேற்று நடிகர் மனோபாலா உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்த நிலையில், இவரும் இறந்து விட்டதாக கூறி பலரும் சோக பதிவுகளை வெளியிட்டு வந்தனர். இதையடுத்து, சரத்பாபுவின் சகோதரி சமூக வலைதளங்களில் பரவும் தவறான கருத்துகளை நம்ப வேண்டாம் என தெரிவித்துள்ளார். சரத்பாபு, உயிருடன் இருப்பதாகவும் அவரது உடல் நிலை சிறிது மாேசாமாக உள்ளதால் அதற்கான சிகிச்சைகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

 

மேலும் படிக்க | பிரபல நடிகரும் இயக்குநருமான மனோபாலா உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்

 

 

சரத்பாபு கவலைக்கிடம்:

 

நடிகர் சரத்பாபு, கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதனால், சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனை ஒன்றில் அவர் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அவரது உடல் நிலையில் மாற்றம் ஏற்படாத நிலையில் ஹைதராபாத் கச்சிபெளலி எனும் இடத்தில் உள்ள ஏ.ஐ.ஜி மருத்துவமனையில் ஒரு சில நாட்களுக்கு முன்னர் அனுமதிக்கப்பட்டார். இவரது உடல் நிலை குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளிவந்த நிலையில் இருந்தன. மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் அவரது உடல் நிலை குறித்து தெரிவித்திருந்தனர். அப்போது சரத்பாபுவின் கல்லீரல், சிறுநீரகம் மற்றும் நுரையீரல் ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியிருந்தனர். இது தவிர அவரது உடலில் உள்ள பிற பாகங்களும் அழற்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இதையடுத்து, சரத்பாபுவின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியானது. 

 

தொடரும் வதந்திகள்:

 

உறுதிபெறாத இறப்பு செய்திகள் சமூக வலைதளங்கில் பரவுவதும் அவை பலரால் பகிரப்பட்டு பின்பு வதந்தி என உறுதி செய்யப்படுவதும் இயல்பாகி விட்டது. கடந்த வருடம், நடிகர் பாக்கியராஜ் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வலைதளங்களில் வதந்தி பரவியது. இதையடுத்து, அவரது மகன் சாந்தனு அப்பா நலமுடன் இருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்திருந்தார். நடிகர் மற்றும் இயக்குநர் பாரதிராஜா குறித்த பொய்யான இறப்பு செய்திகளும் அவ்வப்போது வெளிவந்த நிலையில் இருக்கும். இவர்கள் மட்டுமன்றி, மிஸ்டர் பீன் ஆக நடித்து பலரை கவர்ந்த ரோவன் சபாஸ்டியன் இறந்து விட்டதாக கூட பலமுறை செய்திகள் வெளிவந்துள்ளன. அப்படி ஏதேனும் ஒரு நடிகர் இறந்து விட்டால், அவர்களது குடும்பத்தாரிடமிருந்து அறிவிப்பு வெளிவரும் வரை யாரும் தவறான கருத்துகளை பிறருக்கு பகிர வேண்டாம் என வதந்தியால் பாதிக்கப்பட்ட நபர்கள் தெரிவித்துள்ளனர். 

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

 

Trending News