தனுஷின் 3வது ஹிந்திப் படம்: வெளியானது அதிகாரபூர்வ அறிவிப்பு

தனுஷ், அக்‌ஷய்குமார்  மற்றும் சாரா அலி கான் நடிக்கும் ஹிந்தி படத்தின் அறிவிப்பு அதிகாரபூர்வமாக இன்று வெளியாகியுள்ளது.

Last Updated : Jan 30, 2020, 12:07 PM IST
தனுஷின் 3வது ஹிந்திப் படம்: வெளியானது அதிகாரபூர்வ அறிவிப்பு title=

தனுஷ், அக்‌ஷய்குமார்  மற்றும் சாரா அலி கான் நடிக்கும் ஹிந்தி படத்தின் அறிவிப்பு அதிகாரபூர்வமாக இன்று வெளியாகியுள்ளது.

ராஞ்ஜானா, ஷமிதாப் ஆகிய படங்களுக்குப் பிறகு தனுஷ் நடிக்கும் அடுத்த ஹிந்திப் படம் Atrangi Re. ஆனந்த் எல். ராய் இயக்கும் இந்தப் படத்தில் அக்‌ஷய் குமார், சாரா அலி கான் போன்றோர் நடிக்கிறார்கள். இப்படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். பூஷன்குமார் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஹிமன்ஷு சர்மா கதை எழுதியுள்ளார்.

தனுஷின் முதல் ஹிந்திப் படமான ராஞ்ஜானாவை ஆனந்த்  எல். ராய் 2013-ஆம் ஆண்டில் இயக்கினார். மார்ச் 1 முதல் படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.  

 

 

 

 

இந்தப் படத்துக்காக, தனுஷ், அக்‌ஷய்குமார், சாரா அலிகான் ஆகியோர் சேர்ந்து எடுத்துள்ள புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகியுள்ளன. 

Trending News