புலி வாலை பிடித்து சர்ச்சையில் சிக்கிய சந்தானம்! நெட்டிசன்கள் சரமாரி கேள்வி

புலி வாலை பிடித்து சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் நடிகர் சந்தானம். சுற்றுலா சென்ற இடத்தில் புலியுடன் இருக்கும் வீடியோவை பகிர்ந்த அவருக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன.

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 27, 2022, 12:45 PM IST
  • புலி வாலை பிடித்த சந்தானம்
  • சர்ச்சையில் சிக்கினார்
  • விலங்குகள் நல ஆர்வலர்கள் கேள்வி
புலி வாலை பிடித்து சர்ச்சையில் சிக்கிய சந்தானம்! நெட்டிசன்கள் சரமாரி கேள்வி title=

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சந்தானம். வெளிநாடு சுற்றுலா சென்றிருக்கிறார். அங்கு மிருககாட்சி சாலைக்கு சென்றிருக்கும் அவர், புலியுடன் ஜாலியாக இருக்கும் வீடியோவை டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். நீச்சல் குளம் அருகில் ஒய்யாரமாக அமர்ந்திருக்கும் சந்தானத்துக்கு அருகில் ஒரு புலியும் இருக்கிறது. உருவத்தில் பெரிதாக இருக்கும் அந்த புலி அமைதியாக படுத்திருக்கிறது.

மேலும் படிக்க | விஜய்யை பற்றி ஒண்ணுமே தெரியாது! விரக்தியில் பேசிய தாய் ஷோபா!

அப்போது சந்தானம் புலியின் வாலை கையில் பிடித்திருக்க, பூங்கா ஊழியர் புலியை தலையில் தட்டி எழுப்புகிறார். புலி தூக்கத்தில் இருக்கிறதா? என கேட்கும் சந்தானம், ஒருவித மயக்கத்தில் இருக்கும் புலியை தடவி கொடுக்கிறார். இந்த வீடியோ இப்போது சர்ச்சையாக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் மிருக காட்சி சாலைகளுக்கு எதிராக பெரும் புகார்களும், விமர்சனங்களும் எழுந்து வருகின்றன. பணத்துக்காக கொடிய மிருகங்கள் மிருக காட்சி சாலைகளில் அடைத்து வைக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.

அந்த மிருகங்களுக்கு புகையிலை மற்றும் போதைப் பொருட்கள் கொடுக்கப்படுவதாகவும், இதன் மூலம் மிருக காட்சிசாலைகள் வைத்திருப்பவர்கள் பெரும் பணத்தை சம்பாதிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. பிரபலங்கள் உள்ளிட்டோரை புலியின் அருகில் அமரவைத்து அதனை அவர்கள் விளம்பரத்துக்கு பயன்படுத்திக் கொள்வதாகவும் கூறப்படுகிறது. இந்த சூழலில் சந்தானம் போட்டிருக்கும் வீடியோவுக்கு கமெண்ட் செய்திருக்கும் நெட்டிசன்களும், விலங்குகளை வதைக்கும் இத்தகைய மிருக காட்சி சாலைகளுக்கு சந்தானம் ஆதரவு கொடுக்கிறாரா? ஒரு முன்னணி பிரபலமாக இருக்கும் அவரே இதனை ஊக்குவிக்கலாமா?, மிருக வதை குறித்த புரிதல் இல்லையென்றாலும், இதுபோன்ற வீடியோக்களை பகிர்வதையாவது செய்யாமல் இருந்திருக்கலாம் என்று கருத்துகள் பதிவிடப்பட்டு வருகின்றன.

மேலும் படிக்க | விஜய்யின் வாரிசு ட்ரைலர் இந்த தேதியில் வெளியாகிறதா? வெளியான மாஸ் அப்டேட்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News