ரூ.200 கோடி ஜீவனாம்சத்தை ஏற்க மறுத்த சமந்தா

சமந்தா, நாக சைதன்யா விவாகரத்து பெற உள்ளதாக நேற்று அதிகார பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டனர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 3, 2021, 03:06 PM IST
ரூ.200 கோடி ஜீவனாம்சத்தை ஏற்க மறுத்த சமந்தா title=

நாக சைதன்யா மற்றும் சமந்தா கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்கள் இடையே கடந்த சில வாரங்களாகவே விவாகரத்து தொடர்பான செய்திகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணமே இருந்தாலும் இருவரும் அது தொடர்பாக முழுமையான விளக்கம் எதுவும் தரவில்லை.

சமீபத்தில் நடிகை சமந்தா (Samantha) தனது சமூக வலைதளப் பக்கத்தில் (Social Media) அவரது பெயரின் பின்னால் நாக சைதன்யாவின் (Naga Chaitanya) குடும்பப் பெயரான அக்கினேனி வைத்திருந்தார் ஆனால் சமீபத்தில் அதனை மாற்றியதால் சமந்தாவை விரைவில் நாக சைதன்யாவை விவகாரத்து செய்யப்போகிறார் என்று பலரும் உறுதியாக கூறி வந்தனர்.

ALSO READ | சித்தார்த்தை ஏமாற்றியது யார்; வைரலாகும் பதிவு

இதற்கிடையில் சமீபத்தில் நாகார்ஜுனா குடும்பத்தினர் பங்கேற்ற எந்த நிகழ்விலும் கலந்து கொள்ளாமல் இருந்துக்கொண்டு வந்தார் சமந்தா. இது தொடர்பாக திருப்பதி கோவிலுக்கு சென்று இருந்த நடிகை சமந்தாவிடம் நிருபர் ஒருவர் கேள்வி கேட்டப்போது நடிகை சமந்தா காட்டமாக பதில் அளித்தார். மேலும் இது போன்ற விவாகரத்து செய்தி பரவி வருவது எனக்கு மிகுந்த வேதனையாக உள்ளது என்று தெரிவித்திருந்த விஷயம் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பது போல் அமைந்திருந்தது. 

இந்நிலையில் இன்னும் 5 தினங்களில் தங்களின் 4வது திருமண நாளை கொண்டாட இருந்த நிலையில், 4 ஆண்டுகால திருமண வாழ்க்கையை தற்போது ஒருமித்த கருத்தின் அடிப்படையில் முறித்துக் கொள்வதாக நாக சைதன்யா, சமந்தா இருவருமே தனித்தனியாக தங்களின் சமூக வலைத்தள பக்கங்களில் நேற்று அறிவித்திருக்கின்றனர். இருவருமே ஒருமித்த கருத்தின் அடிப்படையில் விவாகரத்து விரையில் விண்ணப்பிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது திருமண முறிவையடுத்து சமந்தாவிற்கு ஜீவனாம்சமாக 200 கோடி ரூபாயை, நாக சைதன்யா குடும்பத்தின் சார்பில் தர முன்வந்ததாகவும் அதனை ஏற்க சமந்தா மறுத்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், தற்போது திருமண முறிவால் மன உளைச்சலில் இருந்து வரும் நிலையிலும், தற்போது அவர் நடித்துவரும் படங்களின் மீது கவனம் செலுத்த இருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்களிடமிருந்து தகவல் வெளியாகி உள்ளது.

ALSO READ | சமந்தா - நாக சைதன்யா விவாகரத்து செய்யவதாக அறிவிப்பு!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News