சல்மானின் ‘டியூப்லைட்’ டிரைலர் தேதி அறிவிப்பு

Last Updated : May 23, 2017, 02:48 PM IST
சல்மானின் ‘டியூப்லைட்’ டிரைலர் தேதி அறிவிப்பு  title=

சல்மான் கான் நடிப்பில் உருவாகியுள்ள 'டியூப்லைட்' திரைப்படத்தின் டிரைலர் மே 25-ம் தேதி வெளியாகும் என படத்தின் இயக்குனர் கபீர் கான் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கபீர்கான் இயக்கத்தில் எல்லை போரில் மலரும் காதல் கதையை மையமாகக் கொண்டு உருவாகி வரும் 'டியூப்லைட்' திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு குறித்த தணிக்கைக் குழுவின் சான்றிதழை கபீர்கான் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

 

 

இப்படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக சீன நடிகை ஜூஜூ மற்றும் சோயல் கான், ஓம் புரி உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படம் ஜூன் மாதம் ரம்ஜான் பண்டிகை அன்று வெளியாகவிருக்கிறது.

முன்னதாக 'டியூப்லைட்' படத்தின் டிரைலர் மே 24ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Trending News