ரூ.1000 கோடி சம்பளமா? சும்மா கிளப்பிவிடாதீங்கய்யா - சல்மான் கான்

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஆயிரம் கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாக வெளியான செய்தியை கேட்டு ஷாக்காகியுள்ளார் சல்மான் கான்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Oct 15, 2022, 11:49 AM IST
  • தலை சுற்ற வைக்கும் சல்மான்கான் சம்பளம்
  • பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரூ.1000 கோடி சம்பளமா?
  • கேள்விப்பட்ட சல்மான் கானின் ரியாக்ஷன் இதுதான்
ரூ.1000 கோடி சம்பளமா? சும்மா கிளப்பிவிடாதீங்கய்யா - சல்மான் கான் title=

தமிழ் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி அக்டோபர் 9 ஆம் தேதி மாலை பிரம்மாண்ட தொடக்க விழாவுடன் தொடங்க இருக்கும் நிலையில், இந்தியில் பிக்பாஸ் 16வது சீசனில் அடியெடுத்து வைத்துள்ளது. அதுவும் கடந்த 12 சீச்சன்களாக சல்மான் கான் தொகுத்து வழங்கி வருகிறார். அவருக்கான மிகப்பெரிய மார்க்கெட் காரணமாக சல்மான் கானையே பிக்பாஸ் டீம் தொடர்ச்சியாக தொகுப்பாளராக களமிறக்கி வருகிறது. இப்போது தொடங்கியிருக்கும் பிக்பாஸ் சீசனிலும் தொகுப்பாளராக களமிறங்கும் அவருக்கு, பேசப்பட்டிருக்கும் சம்பளம் தொடர்பாக பரவிய தகவல் சினிமா துறையை ஷாக் அடிக்க வைத்தது. 

மேலும் படிக்க | பிக்பாஸ் தமிழ் போட்டியாளராகும் பிரபல நடிகையின் தம்பி; பறவை பெயர் கொண்ட விஜய் டிவி பிரபலம்

அதாவது கடந்த சீசன்களில் 250 கோடி ரூபாய் சம்பளம் பெற்று வந்த அவர் இந்த முறை ஆயிரம் கோடி ரூபாயாக தன்னுடைய சம்பளத்தை உயர்த்திவிட்டதாக கூறப்பட்டது. இந்த தகவல் சினிமா வட்டாரத்தில் தீயாக பரவியது. அந்த சம்பளத்தை பிக்பாஸ் டீம் கொடுக்க ஒப்புக்கொண்டதாக கூறப்பட்டது தான் ஹைலைட். இது குறித்து சல்மான் கானிடமே கேட்கப்பட்டது. இந்த செய்தியை பார்த்து தானும் ஷாக்கானதாக தெரிவித்துள்ளார். "ஆயிரம் கோடி ரூபாய் சம்பளமாக வாங்கினால், இனிமேல் வேலையே செய்யத் தேவையில்லை. உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இப்படி ஒரு தொகையை நான் நினைத்துகூட பார்த்ததில்லை. இதுபோன்ற வதந்திகளால் எனக்கு வழக்கறிஞர் செலவு தான் அதிகமாகிறது. வருமான வரித்துறையினரும் என்ன உற்று கண்காணிக்கிறார்கள்

இப்படியான செய்திகளால் பிக்பாஸ் ஷோவுக்கு நான் வரவில்லை என்று கூட சொல்வேன். எனக்கு அடிக்கடி கோபம் வந்துவிடும். இருந்தாலும், இவர்களுக்கு என்னை விட்டால் வேறு யாருமில்லை என்பதை அறிந்து பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்துவிடுவேன். இந்த ஷோ எனக்கு மிகவும் நெருக்கமானது. புதிய நபர்களை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு இதன் மூலம் கிடைக்கிறது. 4 மாதத்தில் ஒரு புதிய குடும்பம் கிடைத்துவிடுகிறது" என சல்மான்கான் தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க | செப்டம்பர் 30 - த்ரிஷாவுக்கு ஸ்பெஷல்; காரணம் பொன்னியின் செல்வன் மட்டுமல்ல

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News