4 ஆண்டுக்கு பிறகு ஒரு வழியா ரோஜா சீரியலுக்கு எண்டு கார்டு

Roja Serial Last Episode: ரோஜா சீரியலின் அர்ஜுன் கேரக்டரில் நடிக்கும் சிபு சூர்யன் ரசிகர்களுக்காக உருக்கமாக பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Nov 29, 2022, 11:03 AM IST
  • ரோஜா சீரியல் அர்ஜுன் உருக்கமான பதிவு.
  • 4 வருட பயணம் முடிவு.
  • விரைவில் வெளியாகும் கிளைமாக்ஸ் சீன்.
4 ஆண்டுக்கு பிறகு ஒரு வழியா ரோஜா சீரியலுக்கு எண்டு கார்டு title=

சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் ரோஜா சீரியளுக்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது. இந்த சீரியலில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் சிபு சூர்யன், ரோஜாவாக பிரியங்கா நல்கார், வில்லி அனு கதாபாத்திரத்தில் விஜே அக்ஷயா நடித்து வருகின்றனர். இவர்களுடன் மெட்டி ஒலி புகழ் காயத்ரி சாஸ்திரி அர்ஜுனின் அம்மா கதாபாத்திரத்திலும், வடிவுக்கரசி பாட்டி கதாபாத்திரத்திலும், அர்ஜுன் அப்பாவாக சிவா, அதேபோல் வழக்கறிஞராக ராஜேஷ் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

பல வருடங்களாக சன் டிவி அர்ஜுன் ஆக வாழ்ந்து வந்த சிபு சூர்யன் தற்போது ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தியை வெளியிட்டுள்ளார். அதன்படி ரோஜா சீரியல் விரைவில் முடிவடைய இருக்கும் ரகசியத்தை அந்த சீரியல் கதாநாயகன் ரசிகர்களோடு பகிர்ந்து இருக்கிறார். ஒரு சில மாதங்களுக்கு முன்பே இந்த சீரியல் முடிவடைய போகிறது என்ற தகவல்கள் பரவி வந்த நிலையில் தற்போது இந்த செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | நடிகையுடன் வெளிநாட்டில் டேட்டிங்! செம ஹேப்பியில் நாக சைதன்யா - அப்செட்டில் சமந்தா

இந்த நிலையில் தற்போது ரோஜா சீரியல் முடிவடைவது குறித்து நடிகர் சிபு சூர்யன் உருக்கமான பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது., "என்ன ஒரு அற்புதமான நான்கு ஆண்டு பயணம், இதில் பல மகிழ்ச்சியான நினைவுகள் எனக்கு கிடைத்திருக்கிறது. அன்புகளும் குறைவில்லாமல் கிடைத்திருக்கிறது. இன்று ரோஜா சீரியலில் எனது இறுதி படப்பிடிப்பை முடித்த இவ்வேளையில் அதிகமாக ரசிக்கப்பட்ட அர்ஜுன் கதாபாத்திரத்தை என்ன நம்பி எனக்களித்த சரிகம நிறுவனத்திற்கும், சன் டிவிக்கும் நன்றி மீண்டும் ரசிகர்களை சந்திக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

இந்த பதிவைப் பார்த்த ரசிகர்கள், அர்ஜூன் கதாபாத்திரத்தை வரும் நாட்களில் மிஸ் செய்வோம் என்று கமெண்டுகளில் குறிப்பிட்டு வருகிறார்கள்.

இதற்கிடையில் சமீபத்தில் தான் பல திருப்பங்களுக்கு பிறகு போராட்டங்களோடு ரோஜாவிற்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது .குழந்தை பிறந்ததும் இந்த சீரியல் திடீரென முடிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | பேச்சிலர் பார்ட்டிக்காக கிரீஸ் பறந்த ஹன்சிகா! தோழிகளுடன் கும்மாளம் - வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News