Sushant Case: 15 பாலிவுட் பிரபலங்களின் பெயர்களை NCB-யிடம் தெரிவித்த Rhea..அவர்கள் யார்?

கூரியர் சிறுவன் தீபேஷ் சாவந்த் மற்றும் ஷோயிக் சக்ரவர்த்தியை அடையாளம் காட்டியுள்ளான். மேலும், கூரியர் சிறுவனின் தொலைபேசி அழைப்பு விவரங்கள் ஷோயிக் மற்றும் தீபேஷ் ஆகியோரிடமிருந்து கண்டுபிடிக்கப்பட்டன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 11, 2020, 06:21 PM IST
  • ரியா சக்ரவர்த்தி, அவரது சகோதரர் ஷோயிக் மற்றும் 4 பேரின் ஜாமீன் விண்ணப்பங்களை மும்பை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.
  • போதைப் பொருள் வாங்கும் மற்றும் உட்கொள்ளும் சில பாலிவுட் பிரபலங்களின் பெயர்களை ரியா சக்ரவர்த்தி வெளிப்படுத்தியிருந்தார்.
  • NCB-யின் பார்வையில் சுமார் 15 பாலிவுட் பிரபலங்கள் சிக்கியுள்ளனர்.
Sushant Case: 15 பாலிவுட் பிரபலங்களின் பெயர்களை NCB-யிடம் தெரிவித்த Rhea..அவர்கள் யார்? title=

புதுடெல்லி: பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் (Sushant Singh Rajput) மரண வழக்கு தொடர்பான போதைப்பொருள் ஊழல் வழக்கில் ரியா சக்ரவர்த்தி, அவரது சகோதரர் ஷோயிக் (Showik) மற்றும் 4 பேரின் ஜாமீன் விண்ணப்பங்களை மும்பை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது. போதைப் பொருள் தொடர்பான வழக்கு போதைப்பொருள் தடுப்பு ஆணையமான NCB-யால் போடப்பட்டுள்ளது.

ஆதாரங்களின்படி, NCB-யுடனான விசாரணையின் போது, ​​போதைப் பொருள் வாங்கும் மற்றும் உட்கொள்ளும் சில பாலிவுட் பிரபலங்களின் பெயர்களை ரியா சக்ரவர்த்தி (Rhea Chakraborty) வெளிப்படுத்தியிருந்தார். தற்போது NCB-யின் பார்வையில் சுமார் 15 பாலிவுட் பிரபலங்கள் சிக்கியுள்ளனர். மேலும் அவர்கள் பாலிவுட்டின் பி-வகை நடிகர்கள் என்பதும் அறியப்பட்டுள்ளது.

மற்றொரு முக்கியமான விவரம் என்னவென்றால், லாக்டௌன் காலத்தில், ஒரு கூரியர் சர்வீஸ் மூலம் சுஷாந்தின் வீட்டிலிருந்து ரியாவின் இல்லத்திற்கு ஒரு கூரியர் அனுப்பப்பட்டது. தீபேஷ் சாவந்த (Dipesh Sawant), கொரியர் பணியாளரிடம், ரியா சக்ரவர்தியின் வீட்டில் அளிக்கும் படி அந்த பார்சலை சுஷாந்த் வீட்டிலிருந்து அனுப்பியுள்ளார்.

கூரியர் பையனிடமிருந்து ஷோயிக் கூரியரை பெற்றதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த பார்சலில் அரை கிலோ பட்ஸ் (போதைப் பொருள்) இருந்தது. இந்த கூரியர் ஏப்ரல் மாதத்தில் அனுப்பப்பட்டது.

ALSO READ: 14 நாட்கள் நீதிமன்ற காவலில் ரியா, ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு...!

சந்தேகத்தைத் தவிர்ப்பதற்காக, சில வீட்டுப் பொருட்களும் அந்த கூரியர் பாக்கெட்டில் பட்ஸுடன் (போதைப் பொருள்) நிரம்பியிருந்தன. லாக்டௌன் வேளையில் போலீஸ் சோதனைகளின் போது பிடிபடாமல் இருக்க இவை கூரியர் வழியாக அனுப்பப்பட்டன.

கூரியர் சிறுவன் தீபேஷ் சாவந்த் மற்றும் ஷோயிக் சக்ரவர்த்தியை அடையாளம் காட்டியுள்ளான். மேலும், கூரியர் சிறுவனின் தொலைபேசி அழைப்பு விவரங்கள் ஷோயிக் மற்றும் தீபேஷ் ஆகியோரிடமிருந்து கண்டுபிடிக்கப்பட்டன.

இதற்கிடையில், ரியா மற்றும் மற்ற 5 குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஜாமீனுக்காக மும்பை உயர்நீதிமன்றத்தில் (Mumbai High Court) முறையிட வாய்ப்புள்ளது. பாலிவுட் (Bollywood) நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் 2020 ஜூன் 14 அன்று அவரது பாந்த்ரா இல்லத்தில் இறந்து கிடந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் எழவே, அது குறித்த விசாரணைக்கு கோரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. 

ALSO READ: Sushant Case: பெரிய வெளிப்பாடு! குற்றத்தை ஒப்புக்கொண்டார் Rhea Chakraborty

Trending News