Ranveer Singh: 18+ வீடியோவில் ஜானி சின்ஸ் & ரன்வீர் சிங்! வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..

Ranveer Singh and Johnny Sins In Indian Advertisement: பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் ஆபாச பட நடிகர் ஜானி சின்சுடன் நடித்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். இதன் விவரம் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.  

Written by - Ezhilarasi Palanikumar | Last Updated : Feb 12, 2024, 07:51 PM IST
  • 18+ விளம்பரத்தில் ரன்வீர் சிங்-ஜானி சின்ஸ்
  • சர்ச்சையில் சிக்கிய பாலிவுட் பிரபலம்
  • வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
Ranveer Singh: 18+ வீடியோவில் ஜானி சின்ஸ் & ரன்வீர் சிங்! வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.. title=

Ranveer Singh and Johnny Sins In Indian Advertisement Video Goes Viral: பிரபலங்களை வைத்து பல்வேறு டீப் ஃபேக் வீடியோக்கள் வந்து கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் அந்த வீடியோவை பார்த்த பலரும் முதலில் டீப் ஃபேக் என்றுதான் நினைத்தார்கள். ஆனால் அதுதான் இல்லை உண்மையிலேயே ஆபாச பட நடிகர் ஜானி சின்ஸும் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கும் ஒரு விளம்பரத்தில் நடித்துள்ளனர்.

சினிமா நட்சத்திரங்கள் விளம்பரங்களில் நடிப்பது ஒரு பெரிய விஷயம் அல்ல. ஆனால் எந்த வகையிலும் தனது இமேஜை பாதிக்காத வகையில் பெரும்பாலான நட்சத்திரங்கள் விளம்பரங்களில் நடிப்பார்கள் ..சூழல் இப்படி இருக்க ரன்வீர் மட்டும் சற்று வித்தியாசமாக யோசித்துள்ளார்.அந்த வகையில் அவர்ஒரு பாலியல் ஆரோக்கியம் குறித்த ஒரு விளம்பரத்தில் நடித்திருக்கிறார். ஆனால், அதைவிடவும் ஷாக் ஆன விஷயம் அதில் ஆபாச பட ஜானி சின்ஸும் இருப்பது தான். ஆம், இருவரும் இணைந்து boldcare என்ற நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்திருக்கிறார்கள்.

மேலும் படிக்க | ரசிகரின் போனை பிடுங்கி விசிறியடித்த பிரபல பாடகர்..வைரல் வீடியோ!

Ranveer Singh

ஏக்தா கபூரின் நாடக பாணியில் எடுக்கப்பட்டிருக்கும்  இந்த 18+ விளம்பரம் தான் தற்போது இணையம் முழுவதும் பேச பொருளாகியுள்ளது. இந்த விளம்பரத்தை ரன்வீர்  தனது சோசியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்து இருக்கும் நிலையில் உண்மையிலேயே ஆண்களின் பாலியல் ஆரோக்கியத்திற்காக எடுக்கப்பட்டிருக்கும் இந்த விளம்பரம்   துணிச்சலான நகர்வு என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். அதேபோல சிலர் இந்த விளம்பரத்தை விமர்சித்தும் வருகின்றனர் ஏற்கனவே ரன்வீர் சிங்கை பொருத்தவரை அவர் இதற்கு முன்னர் ஒரு பத்திரிக்கைக்கு நிர்வாணமாக போஸ் கொடுத்தது  சரச்சையானது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | ரசிகர்களுக்கு ஷாக்! விஜய் இனி கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News