"ஓரின சேர்க்கையை" போற்றும் ராம் கோபால் வர்மாவின் "டேன்ஜரஸ்" படம் சர்ச்சையில்!

பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா இயக்கிய "டேன்ஜரஸ்" என்ற லெஸ்பியன் திரில்லர் படம் திரைக்கு வரவுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 31, 2022, 11:10 AM IST
  • பெண்களுக்கு ஆண்களை பிடிக்கவில்லை என்றால் அவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு உள்ளது - ராம் கோபால் வர்மா.
  • ராம் கோபால் வர்மா இயக்கிய "டேன்ஜரஸ்" என்ற லெஸ்பியன் திரில்லர் படம் திரைக்கு வரவுள்ளது.
"ஓரின சேர்க்கையை" போற்றும் ராம் கோபால் வர்மாவின் "டேன்ஜரஸ்" படம் சர்ச்சையில்! title=

ரத்த சரித்திரம், வீரப்பன் போன்ற பல ஹிந்தி, தெலுங்கு படங்களை இயக்கியவர் இயக்குநர் ராம் கோபால் வர்மா. இவர் டிராமா படங்கள், பேய் படங்கள், சர்ச்சையை கிளப்பும் படங்கள் என பலவகை படங்களையும் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

இவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தற்போது ஆர்.ஆர்.ஆர் படம் குறித்து இயக்குநர் ராஜமௌலியை டாக் செய்து டுவீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், ராஜமௌலி சாரிடம் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் போன்ற டேன்ஜரஸ்ஸான ஆண்கள் இருப்பதுபோல் தன்னிடம் நைனா கங்குலி, அப்சரா ராணி ஆகிய டேன்ஜரஸ் பெண்கள் உள்ளனர் என்று ஒரு புகைப்படத்துடன் பதிவிடப்பட்டுள்ளது.

இதன் பின்னணி என்னவென்றால், ராம் கோபால் வர்மா இயக்கத்தில் நைனா கங்குலி, அப்சரா ராணி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள "டேன்ஜரஸ்" என்ற தெலுங்கு படம் தமிழில் "காதல் காதல்தான்" என்ற தலைப்புடன் ஏப்ரல் 8ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

மேலும் படிக்க | சர்ச்சையைக் கிளப்பிய மன்மத லீலை: எஸ்.ஜே.சூர்யாவைக் கை காட்டும் வெங்கட் பிரபு

இப்படத்தில் கதாநாயகிகள் லெஸ்பியன் உணர்வு கொண்டவர்களாக நடித்துள்ளனர். தற்போது இப்படத்தின் புகைப்படங்கள், மற்றும் கிளிம்ஸ் வீடியோக்கள் வெளியாகி பெரும் சரச்சையை ஏற்படுத்துயுள்ளது.

இதற்கிடையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ராம் கோபால் வர்மா இப்படம் குறித்து பேசியுள்ளார்.

Kaadhal kaadhal thaan

அந்த செய்தியாளர் சந்திப்பில் அவர், "லெஸ்பியனாக இருப்பவர்கள் தங்களது நிலைபாடு குறித்து வெளியே சொல்வதை அசிங்கமாக நினைக்கிறார்கள். அது மாற வேண்டும் என நினைக்கிறேன். இது ஒரு க்ரைம் ட்ராமா படம். அதில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இருவரும் லெஸ்பியன் உணர்வு கொண்டவர்கள். "

"பெண்களுக்கு ஆண்களை பிடிக்கவில்லை என்றால் அவர்களுக்கு மற்றொரு வாய்ப்பும் உள்ளது என்பதுதான் இந்தப் படம் சொல்லவரும் மெசேஜ். நாம் ஒரு விஷயத்தை அழுத்தமாக சொல்லும்போது மாற்றுக்கருத்து கொண்டவர்கள் எதிர்க்கத்தான் செய்வார்கள். எனக்கு சர்ச்சை மிகவும் பிடிக்கும். வழக்கமான மனிதர்களை பார்த்து எனக்கு சலிப்பு தட்டிவிட்டது". என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க | எனக்கு கொரோனா வந்த நேரத்தில் முத்தக் காட்சியில் நடித்தேன்: அசோக் செல்வன்

இருப்பினும் இப்படத்திற்கு மக்கள் பெருமளவில் தங்களது கண்டனங்களையே தெரிவித்து வருகின்றனர். மேலும் இப்படத்தின் டிரைலரில் கதாநாயகிகள் இருவரும் அதிகமாக கிளாமரை காட்டும் வகையில் உள்ளதால் படத்தை பலரும் இணையத்தில் சாடி வருகின்றனர். எப்போதும் சர்ச்சைகளை தேடி தேடி விழும் ராம் கோபால் வர்மாவிற்கு இது மிகவும் பரிட்சையமான சூழல்தான் என நெட்டீசன்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News