வெற்றிமாறன் கதையில் ராகவா லாரன்ஸ்.. வெளியானது மிகப்பெரிய அப்டேட்

நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்குநர் வெற்றிமாறன் கதையில் உருவாகி இருக்கும் 'அதிகாரம்' படத்தில் நடிக்கயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 22, 2024, 01:04 PM IST
  • வெற்றிமாறன் கதையில் ராகவா லாரன்ஸ்.
  • ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார்.
வெற்றிமாறன் கதையில் ராகவா லாரன்ஸ்.. வெளியானது மிகப்பெரிய அப்டேட் title=

Raghava Lawrence next movie with Vetrimaaran: நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்குநர் வெற்றிமாறன் கதையில் உருவாகி இருக்கும் 'அதிகாரம்' படத்தில் நடிக்கயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான முழு விவரத்தை இந்த கட்டுரையில் காண்போம்.

இயக்குனர் வெற்றிமாறன்:
தமிழ் திரையுலகின் வெற்றி இயக்குநர்களுள் ஒருவராக இருப்பவர், வெற்றிமாறன். தற்போது இவர் சூரி மற்றும் விஜய் சேதுபதியை வைத்து விடுதலை 2 படத்தை இயக்கி வருகிறார். இது தவிர அவர் சூரியின் கருடன் படத்துக்கு கதை எழுதி முடித்துள்ளார். அதுமட்டுமின்றி கோபி நயினார் இயக்கத்தில் உருவாகும் மனுசி திரைப்படத்தை தயாரித்து வருகிறார். அதை முடித்துவிட்டு அவர் வாடிவாசல் படத்தை தான் தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அடுத்து ராகவா லாரன்சை அவர் இயக்க போவதாக தற்போது அறிவிப்பு வந்திருக்கிறது.

மேலும் படிக்க | Latest News TV Anchor DD Divorce: விவாகரத்தில் முடிந்த திருமணம்..தாங்க முடியாத சாேகம்! மனம் திறந்த டிடி!

வெற்றிமாறன் - ராகவா லாரன்ஸ்:
இந்நிலையில் தற்போது இயக்குனர் வெற்றிமாறன் ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ள புதிய படத்துக்கு கதை மற்றும் திரைக்கதை எழுதியுள்ளார். இந்த படத்திற்கு அதிகாரம் என டைட்டில் வைக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த திரைப்படத்தை ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸும் - கிராஸ் ரூட் ஃப்லிம் கம்பெனியும் இணைந்து தயாரிக்கவிருக்கிறது. இதில் ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் சார்பில் எஸ்.கதிரேசன் ஏற்கனவே வெற்றிமாறன் இயக்கத்தில் பொல்லாதவன், ஆடுகளம் படங்களை தயாரித்துள்ளார். அதேபோல் கிராஸ் ரூட் ஃப்லிம் கம்பெனி சார்பில் காக்கா முட்டை, விசாரணை, வட சென்னை உள்ளிட்டப் படங்களை இயக்குநர் வெற்றிமாறன் தயாரித்தார். தற்போது அதிகாரம் படத்திற்கு வெற்றிமாறன் கதை, திரைக்கதை, வசனம் எழுத, இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். இப்படம் மூலம் ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் எஸ்.கதிரேசன் - வெற்றிமாறன் இருவரும் சுமார் பத்தாண்டுகளுக்குப் பிறகு இணைந்துள்ளனர். பான் இந்தியா படமாக தயாராகும் இப்படத்தில், ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிப்பதாக தெரிவித்தனர்.

அந்த வகையில் இந்த படம் தொடர்பாக நடிகர் ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அவர் அதிகாரம் படத்தின் திரைக்கதையை கேட்டு நாம் பிரமித்துப் போனேன். வெற்றிமாறன் எழுதியுள்ள இந்த பிரமாண்ட கதையில் எனக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியை தந்துள்ளது. இப்படத்தின் பணிகளைத் தொடங்குவதற்கு காத்திருக்க முடியவில்லை. இந்த அருமையான கதையை எனக்கு அளித்த வெற்றிமாறனுக்கு நன்றி. தயாரிப்பாளர் கதிரேசனுக்கு நன்றி. அனைவரது ஆசிர்வாதமும் வேண்டும் என்று புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க | Ghilli Re Release TN Box Office Collection: 20 ஆண்டுகளுக்கு பிறகும் நின்று பேசும் கில்லி! தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடி வசூலா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News