தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியலில் நடித்து பிரபலமானவர் ரக்ஷிதா மகாலட்சுமி. இவர் தன்னுடன் பிரிவோம் சந்திப்போம் சீரியலில் நடித்த தினேஷ் என்பவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் திருமணம் செய்து கொண்டு போரூர் அடுத்த அய்யப்பந்தாங்கலில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர்.
இவர்கள் ஜீ தமிழில் மீண்டும் ஒரு சீரியலில் ஒன்றாக நடித்தனர். அதன்பிறகு அந்த சீரியல் நிறுத்தப்பட்டதால், இருவரும் வேறி சேனலில் சீரியலில் நடித்தனர். அதோடு பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரக்ஷிதா கலந்து கொண்டார். அப்போது தான் பலருக்கும் இவர் தனது கணவருடன் பிரிந்து வாழ்வது தெரியவந்தது. அதோடு அவர் தினேஷ் மீது பல அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்தார்.
மேலும் படிக்க | இவரை நினைவிருக்கிறதா? தனுஷ் பட நடிகைக்கு இப்படியொரு குடும்பமா..?
அதோடு பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்தவர், அதன்பிறகு பல்வேறு தொலைக்காட்சியில் நடுவராகவும், ஆங்கராகவும் இருந்து வருகிறார். தினேஷ் பிரபல தொலைகாட்சியில் முக்கிய சீரியலில் நடித்து வருகிறார். இந்த சூழலில் தான் மாங்காடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ரக்ஷிதா பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் தான் தினேஷை பிரிந்து தனியாக வாழ்ந்து வருவதாகவும், கடந்த சில தினங்களாக தனது செல்போனுக்கு ஆபாசமாக அவர் மெசேஜ் அனுப்பி தொல்லை செய்வதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தனது செல்போன் எண்ணுக்கு தினேஷ் தொடர்பு கொண்டு மிரட்டல் விடுவதாகவும் புகாரில் கூறியுள்ளார்.
இந்த புகாரின் பேரில் மாங்காடு அனைத்து மகளிர் போலீசார் தினேஷை விசாரணைக்கு அழைத்தனர். இந்நிலையில் போலீஸ் நிலையம் வந்த தினேஷ் ரக்ஷிதா வேண்டுமானால் விவாகரத்து பெற நீதிமன்றத்தை நாடிக் கொள்ளலாம் என தெரிவித்துவிட்டு சென்றுள்ளார். இந்த புகார் தொடர்பாக ரக்ஷிதாவிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதாவது விவாகரத்து பெற ரக்ஷிதா விரும்புகிறார். ஆனால் தினேஷ் அவருடன் சேர்ந்து வாழ ஆசைப்படுகிறார் என அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிரிந்து வாழ்ந்து வரும் கணவர் தனக்கு மிரட்டல் கொடுப்பதாக சின்னத்திரை நடிகை ரட்சிதா அளித்த புகாரால் தற்போது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று இரவு மாங்காடு காவல் நிலையத்தில் ரச்சிதா பரபரப்பு புகார் அளித்திருக்கிறார். அதில் தனது கணவர் தினேஷ் செல்போனில் தனக்கு ஆபாச மெசேஜ் அனுப்புவதோடு மிரட்டல் விடுப்பதாகவும் கூறி இருக்கிறார். இந்த புகாரின் பேரில் போலீசார் இருவரிடமும் விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் படிக்க | Na Ready: ‘இந்த பாடலை பாடியவர் உங்கள் விஜய்..’ நா ரெடி பாடலின் ப்ரமோ வெளியீடு..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ