ஒரே இரவில் மாற்றத்தை கொண்டுவர முடியாது -நடிகர் பிரகாஷ் ராஜ்!

ஒரே இரவில் மாற்றத்தை கொண்டுவர முடியாது. கட்சி துவங்கும் எண்ணம் எனக்கு இல்லை -நடிகர் பிரகாஷ் ராஜ்!

Last Updated : May 5, 2018, 03:37 PM IST
ஒரே இரவில் மாற்றத்தை கொண்டுவர முடியாது -நடிகர் பிரகாஷ் ராஜ்!  title=

கடந்த சில மாதங்களாகவே நடிகர் பிரகாஷ் ராஜ் #justasking-என்ற டேக்கை பயன்படுத்தி பா.ஜ.க-வை கடுமையாக விமர்சித்து வருகிறார். மேலும் மத்திய அரசின் அமைச்சர்களையும், கர்நாடகா பா.ஜ.க-வின் நடவடிக்கையையும் பற்றி அவர் கூறும் கருத்துக்கள் கடும் சர்ச்சையை உருவாக்கி வருகிறது. 

கார்நாடக மாநிலத்தின் சட்டமன்ற தேர்தல் வரும் மே 12-ம் நாள் நடைப்பெறவுள்ள நிலையில், நாட்டின் இரண்டு பிரதான கட்சிகளும் அனல் பறக்கும் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி காண அனைத்து கட்சிகளும் பல யுக்திகளை கையாண்டு வருகிறது. 

இந்நிலையில், பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக குஜராத் மாநில எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானி மற்றும் நடிகர் பிரகாஷ் ராஜ் மீது அவதூறு வழக்கு பதிவு செய்தனர். இதை தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த நடிகர் பிரகாஷ் ராஜ் மதத்தையும் அரசையும் பாஜக ஒன்று சேர்த்தால் இந்தியாவும் பாகிஸ்தானைப் போல் ஆகிவிடும் என்று கூறியுள்ளார்.

இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்..!
 
நாம் தேர்ந்தெடுத்துள்ள பிரதிநிதிகளிடம் நாம் தொடர்ந்து கேள்வி கேட்க வேண்டும். நான் அரசியலில் களமிறங்க உள்ளதால் கேள்விகள் கேட்பதாக சிலர் கூறுகின்றனர். என்னுடைய ஒரே குறிக்கோள் மக்கள் எதையும் மறக்க கூடாது என்பதே.

பாஜக ஒரு விஷயத்தை மறக்கடிக்க மற்றொரு விஷ்யத்தை கிளப்பி விடுகிறது. என்னதான் திசை திருப்பினாலும் பாஜக அளித்து வரும் கஷ்டங்களை மக்கள் மறக்க மாட்டார்கள். இதனால் பாஜக மீண்டும் பாஜக ஆட்சிக்கு வர வாய்ப்பில்லை என்று கூறியுள்ளார்.

 

Trending News