தமிழ் சினிமாவில் தற்போது குழந்தைகளுக்காக வெளியாகும் படங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இன்றைய சூழலில் ரசிகர்களின் விருப்பம் உலகளவில் மாறி உள்ளதால் இந்த ஜானரில் படங்கள் அவ்வளவாக வெளிவருவதில்லை. அந்த குறையை தீர்ப்பதற்கு வெளியாகியுள்ளது மை டியர் பூதம் படம். பிரபுதேவா, அஸ்வந்த் அசோக்குமார், ரம்யா நம்பீசன் நடிப்பில் மைடியர் பூதம் படம் உருவாகியுள்ளது. இந்த படத்தினை எழுதி இயக்கியுள்ளார் என் ராகவன், அபிஷேக் ஃபிலிம்ஸ் இந்த படத்தினை தயாரித்துள்ளது.
மேலும் படிக்க | சாய்பல்லவி நடித்த கார்கி படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம்!
வேற்று உலகத்தில் வாழும் பிரபுதேவாவிற்கு நீண்ட நாட்களாக குழந்தை வரம் இல்லாமல் உள்ளது. பிறகு ஒரு ஆண் குழந்தையும் அவருக்கு பிறக்கிறது, இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். பிரபுதேவாவின் மகன் தவம் இருக்கும் ஒரு முனிவரை தவறுதலாக எழுப்பி விடுகிறார். இதனால் கோபம் அடைந்த முனிவர் பிரபுதேவாவிற்கு சாபமிட்டு பூமிக்கு அனுப்புகிறார். உன்னை விடுவிக்க மந்திரத்தை கூற வேண்டும் என்றும் சொல்லிவிடுகிறார். பல நூற்றாண்டுகளுக்கு பிறகு பூமியில் அஸ்வந்த் கையில் பிரபு தேவா கிடைக்கிறார். ஆனால் அஸ்வந்திற்கு திக்குவாய் பிரச்சினை உள்ளது. இறுதியில் அவர் அந்த மந்திரத்தை சொல்லி பிரபுதேவாவை விடுவித்தாரா? பிரபுதேவா அவரோடு மகனுடன் சேர்ந்தாரா? என்பது தான் மைடியர் பூதம் படத்தின் கதை.
முழுக்க முழுக்க குழந்தைகளுக்காகவே எடுக்கப்பட்ட திரைப்படம் ஆக உள்ளது மை டியர் பூதம். அவர்களின் உலகிற்கு சென்று அவர்கள் ரசிக்கும் விஷயங்களை பார்த்து பார்த்து காட்சிகளாக வைத்துள்ளார் இயக்குனர் ராகவன். இயக்குனரின் பேச்சுக்கு கொஞ்சம் கூட மறுப்பு தெரிவிக்காமல் பிரபுதேவா அவர் சொன்னதை எல்லாம் செய்திருக்கிறார். தனது வழக்கமான நடிப்பை விட்டு ஒரு படி கீழ் இறங்கி சிறப்பாகவே நடித்துள்ளார். பிரபு தேவா மொட்டை அடிப்பது, ஒரு செகண்ட் காட்சிக்காக கெட்டப் சேஞ்ச் பண்ணுவது என அந்த கதாபாத்திரத்திற்கு தேவையான அனைத்தையும் கொடுத்திருக்கிறார். சூப்பர் டீலக்ஸ் படத்தில் அனைவரையும் கவர்ந்த அஸ்வந்த் இந்த படத்தில் திக்குவாய் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார். அஸ்வந்தின் அம்மாவாக வரும் ரம்யா நம்பீசன் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
படம் முழுக்க கிராபிக்ஸ் காட்சிகள் நிறைந்து இருந்தாலும், குறை சொல்ல முடியாத அளவிற்கு சிறப்பாகவே உள்ளது. கதையாக புதிதாக எதுவும் இல்லை என்றாலும் காட்சி அமைப்புகளில் சுவாரசியத்தை கூட்ட முயற்சி செய்து அதில் ஓரளவிற்கு வெற்றியும் பெற்றுள்ளார் இயக்குனர். சிறப்பு தோற்றத்தில் தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்பு இப்படத்தில் நடித்துள்ளார். ஒளிப்பதிவு, பின்னணி இசை, எடிட்டிங் என அனைத்தும் படத்திற்கு ஏற்றார் போல் அமைந்துள்ளது. குழந்தைகளுடன் ஒரு ஜாலி ரைடு போக மைடியர் பூதம் ஒரு பெஸ்ட் சாய்ஸ்.
மேலும் படிக்க | பார்த்திபனின் இரவின் நிழல் படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR