தேசிய விருது வென்ற இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் அதர்வா நடித்துள்ள பட்டத்து அரசன் இன்று வெளியாகி உள்ளது. அதர்வா நடிப்பில் இந்த ஆண்டு ஏற்கனவே குருதி ஆட்டம் மற்றும் ட்ரிகர் படங்கள் வெளியான நிலையில் பட்டத்து அரசன் படமும் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் அதர்வாவுடன் ராஜ்கிரன், ராதிகா சரத்குமார், சிங்கம் புலி, பால சரவணன் என பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளார்.
மிகப்பெரிய கபடி வீரராக உள்ளார் ராஜ்கிரண். அரசு வேலையைவிட ஊரின் மானம்தான் பெரியது என்று ஊருக்காக கபடி விளையாடி வருகிறார். அவரது மகன் பேரன் என அனைவரும் ஊருக்காக கபடி ஆடுகின்றனர். இந்நிலையில் ஒரு கட்டத்தில் ராஜ்கிரனின் குடும்பம் ஊருக்கு துரோகம் விளைவித்ததாக ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்படுகின்றனர். பின்பு கபடி விளையாடத் தெரியாத அதர்வா தனது குடும்பத்தினருடன் சேர்ந்து ஊரை எதிர்த்து எப்படி ஜெயிக்கிறார் என்பதே பட்டத்து அரசன் படத்தில் கதை.
மேலும் படிக்க | சசிகுமாரின் காரி படம் எப்படி இருக்கு? திரைவிமர்சனம்!
சண்டிவீரன் படத்துக்கு பிறகு அதர்வாவிற்கு முழுக்க முழுக்க ஒரு கிராமத்து கதை வசனம் கொண்ட படமாக பட்டத்து அரசன் படம் அமைந்துள்ளது. துடிப்பான கிராமத்து இளைஞனாக அசத்தியுள்ளார் அதர்வா. அவரின் அம்மாவாக ராதிகா வழக்கம் போல சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். கபடியை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தை குடும்பம், பாசம் என அனைத்தையும் சேர்த்து ஒரு விருந்தாக படைத்துள்ளார் இயக்குனர் சற்குணம். கபடி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு இருந்த விதம் சிறப்பாக இருந்தது.
அதர்வாவின் கதாபாத்திரத்திற்கு இன்னும் சிறிது முக்கியத்துவம் கொடுத்து இருக்கலாம். சிங்கம் புலி, பால சரவணன் போன்றோருக்கு இன்னும் காட்சிகம் அதிகமாக கொடுத்து இருந்தால் கூடுதல் சிறப்பாக இருந்து இருக்கும். ஜிப்ரான் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு ஏற்றார் போல் உள்ளது. கதாநாயகி ஆசிகா ரங்கநாத் ஒரு கபடி வீரராக அசத்தி உள்ளார். பட்டத்து அரசன் - குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி.
மேலும் படிக்க | சோதனை மேல் சோதனை... வாரிசுக்கு புதிய பிரச்னை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ