மீண்டும் டிரெண்ட் ஆகிய தல அஜித்தின் ஸ்டில்

Last Updated : Mar 23, 2017, 09:45 AM IST
மீண்டும் டிரெண்ட் ஆகிய தல அஜித்தின் ஸ்டில் title=

சமீபத்தில் ரத்தக்காயங்களுடன் அதிரெடியாகவும் ஆக்ரோஷமாகவும் அஜித் ஸ்டில் ஒன்று இணையதளங்களில் வெளியாகி வைரலாகி பரவியது. இந்த ஸ்டில் வெளியான ஒருசில மணி நேரங்களில் டிவிட்டரில் உலக டிரெண்டுக்கு வந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்

இந்நிலையில் நேற்று நள்ளிரவு விவேகம் படத்தின் இன்னொரு ஸ்டில் வெளியாகியுள்ளது. பனிமலையில்  வெள்ளை உடையில் வெள்ளை பிரேம் போட்ட கண்ணாடியில் அஜித் துப்பாக்கியை கையில் வைத்திருக்கும் இந்த ஸ்டில் அஜித் ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றது. 

அஜித், காஜல் அகர்வால், அக்சரா ஹாசன், விவேக் ஓபராய் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். அனிருத் இசையில் உருவாகி வரும் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

 

 

Trending News