தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் எழில், சுடர், மனோகரி என்று மூவரும் ஸ்கூலுக்கு கிளம்பி வந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, மனோகரி எழிலிடம் பேச போகும் போதெல்லாம் சுடர் எதையாவது பேச மனோகரி கடுப்பாகிறாள். இதனையடுத்து இவர்கள் ஸ்கூலுக்குள் வந்து இறங்குகின்றனர். அப்போது, அஞ்சலி டீச்சரை பார்க்க எதிர்பாராத விதமாக எழில் மீது மோதி விடும் டீச்சர் எழிலை பார்த்து இம்ப்ரெஸ் ஆகிறார்.
அடுத்து அஞ்சலி டீச்சரை பார்க்கணும் என்று சொல்ல வாங்க நான் தான் அஞ்சலி டீச்சர் என்று அழைத்து சென்று உட்கார வைத்து பேசுகிறாள், பக்கத்தில் சுடர் இருக்க நீங்க யாரு? குழந்தைக்கு அம்மாவா என்று கேட்க சுடர் இல்ல கேர் டேக்கர் என்று சொல்கிறாள்.
மேலும் படிக்க | இந்த 7 மலையாள கிரைம் த்ரில்லர் படங்களை மிஸ் பண்ணாம பாத்துருங்க!
இதனையடுத்து அப்போ உங்க வைப் இல்லையா என்று கேட்க எழில் அவங்க இல்ல, இப்போ நான் சிங்கிள் என்று சொல்ல ஏன் சார் இவ்வளவு ஹாண்ட்ஸமாக இருந்திட்டு சிங்கிள்னு சொல்றீங்க என்று பேச டீச்சர் பேசுவதை புரிந்து கொண்ட எழில் அங்கிருந்து எஸ்கேப் ஆக முயற்சி செய்கிறான். பிறகு போன் அபி, காவியா, கவின் டீச்சரை பார்க்க போகும் அங்கும் வரும் அஞ்சலி டீச்சர் எழிலிடம் போன் நம்பர் கேட்க அவன் ஒரு போன் கால் வந்திருப்பதாக சொல்லி எஸ்கேப் ஆகிறான்.
இறுதியான கவின் டீச்சர் ரேங்க் காரட்டை எடுத்து நீட்ட எழில் வேண்டாம் எவ்வளவு மார்க் எடுத்து இருப்பான்னு தெரியும் என்று சொல்லி விடுகிறான், டீச்சர் அவனோட பெர்பாமன்ஸ் சரியில்ல என்று சொல்ல சுடர் அடுத்த எக்ஸாம்க்குள்ள நான் அவனை மாத்துறேன் என்று சவால் விடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
நினைத்தேன் வந்தாய்: சீரியலை எங்கு பார்ப்பது?
நினைத்தேன் வந்தாய் சீரியல் 2024 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது.
மேலும் படிக்க | லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிக்க ரஜினிகாந்த் வாங்கியுள்ள சம்பளம் விவரம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ