NGK trailer: சூர்யா ரசிகர்களுக்கு நாளை அசத்தல் சர்ப்ரைஸ்!

சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘NGK’ திரைப்படத்தின் அனைத்து பாடல்கள் மற்றும் டிரைலர் நாளை வெளியாக உள்ளது.

Last Updated : Apr 28, 2019, 12:44 PM IST
NGK trailer: சூர்யா ரசிகர்களுக்கு நாளை அசத்தல் சர்ப்ரைஸ்! title=

சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘NGK’ திரைப்படத்தின் அனைத்து பாடல்கள் மற்றும் டிரைலர் நாளை வெளியாக உள்ளது.

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வரும் திரைப்படம் NGK. இத்திரைப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி என இரண்டு கதாநாயகிகள் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். தற்போது இந்தப் படத்தின் தயாரிப்புப் பணிகள் நிறைவடைந்து திரைக்கு வரத் தயாராக உள்ளது.

அண்மையில் இப்படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டனர். யுவன் ஷங்கர் ராஜா இசையில் கபிலன் வரிகளில் உருவாகியுள்ள இப்பாடல் அதன் உள்ளடக்கத்திற்காக ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தற்போது மற்ற அனைத்து பாடல்கள் மற்றும் டிரைலர் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending News