மும்பை: அவரது சகோதரர் ஷோயிக் கைது செய்யப்பட்ட சில நாட்களுக்கு பின்னர், சுஷாந்த் சிங் ராஜ்புத் (Sushant Singh Rajput) மரண வழக்கில் போதைப்பொருள் விசாரணை தொடர்பாக நடிகை ரியா சக்ரவர்த்தியை (Rhea Chakraborty) போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் (என்சிபி - NCB) கைது செய்தது. ஞாயிற்றுக்கிழமை காலை என்.சி.பியால் அவருக்கு முதன்முதலில் சம்மன் அனுப்பப்பட்டது. மேலும் அவர்களை மும்பையின் கொலாபாவில் உள்ள தங்கள் அலுவலகத்திற்கு வரும்படி கேட்டுக்கொண்டார். ஆனால் தன்னை போலீஸ் பாதுகாப்போடு அழைத்து செல்லவேண்டும் என கோரிக்கை வைத்தார்.
அவர் நேற்றும் மற்றும் இன்றும் என்சிபி முன் ஆஜரானார். பல மணி நேரம் விசாரணைக்கு பின்னர், என்.சி.பி. இறுதியாக இன்று (செவ்வாய்க்கிழமை) அவரை கைது செய்தது.
ரியாவின் தொலைபேசியில் போதைப்பொருள் நுகர்வு, கொள்முதல், பயன்பாடு மற்றும் போக்குவரத்து தொடர்பான வாட்ஸ்அப் அரட்டைகள் இருப்பதாக அமலாக்க இயக்குநரகம் (ED) இலிருந்து தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து NCB சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்தையும், போதைப்பொருள் விவகாரம் இரண்டுக்கும் ஏதோ தொடர்பு இருக்கிறதா? என்ற கோணத்தில் விசாரிக்கத் தொடங்கியது.
ALSO READ | Sushant Case: பெரிய வெளிப்பாடு! குற்றத்தை ஒப்புக்கொண்டார் Rhea Chakraborty
34 வயதான சுஷாந்தின் மரணத்தில் ரியா சக்ரவர்த்தி முக்கிய குற்றவாளியாக ஆக்கப்பட்டுள்ளார். சுஷாந்தின் தந்தை ஜூலை 25 ஆம் தேதி தனது மகனின் தற்கொலைக்கு காரணம் ரியா தான் என புகார் அளித்தார். ரியா தனது மகனின் பணத்தை திருடியதாகவும், அவருக்கு அதிகப்படியான போதை பொருட்களை அளித்ததாகவும், மேலும் அவரது மனநல பிரச்சினைகளை பொதுவெளியில் பகிரங்கப்படுத்த அச்சுறுத்தியதாகவும் அவர் குற்றம் சாட்டினார். எனது மகன் எங்கள் குடும்பத்திலிருந்து தூர விலக காரணம் ரியா தான் என்று அவர் மேலும் குற்றம் சாட்டினார்.
ஆனால் மருத்துவமனைஓ அறிக்கையில் சுஷாந்துக்கு மனநல பிரச்சினைகள் உறுதிப்படுத்திய போதிலும், நடிகருக்கு மனநல பிரச்சினைகள் எதுவும் இல்லை என்று சுஷாந்தின் குடும்பத்தினர் மறுத்துள்ளனர்.
தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் பொது இடங்களில் அவமதிப்பு மற்றும் சமூக ஊடகங்களில் ட்ரோலிங் ஆனதை அடுத்து, மரணம் குறித்து நியாயமான விசாரணைக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் ரியா முறையிட்டார்.
மேலும் ஊடகங்கள் ஒரு நியாயமற்ற மற்றும் ஆதாரம் இல்லாமல் தன்மீது குற்றசாற்றுவதாக உச்சநீதிமன்றத்திற்கு சென்றார், அங்கு தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளார்.
ரியா மற்றும் ஷோயிக்கின் தந்தை லெப்டினன்ட் கேணல் இந்திரஜித் சக்ரவர்த்தி (ஓய்வு பெற்றவர்) தனது மகன் ஷோயிக் கைது செய்யப்பட்ட பின்னர் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில் எனது மகள் அடுத்தவராக இருப்பார் என்று சுட்டிக்காட்டினார்.
"வாழ்த்துக்கள் இந்தியா, நீங்கள் என் மகனைக் கைது செய்துள்ளீர்கள், அடுத்த இடத்தில் என் மகள் என்று எனக்குத் தெரியும், அதன்பிறகு யார் என்று எனக்குத் தெரியவில்லை. நீங்கள் ஒரு நடுத்தர குடும்பத்தை திறம்பட இடித்துவிட்டீர்கள். ஆனால் நிச்சயமாக, நீதி எல்லாம் நியாயமானது. ஜெய் ஹிந்த்" என்று அவர் கூறினார்.