நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் எங்கு எப்போது?... வெளியான புது தகவல்

நயன் - விக்னேஷ் சிவன் திருமணம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

Written by - க. விக்ரம் | Last Updated : May 28, 2022, 02:39 PM IST
  • நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம்
  • நயன் விக்னேஷ் சிவன் திருமணம் மகாபலிபுரத்தில் நடக்கிறது
  • ஜூன் 9ஆம் தேதி திருமணம்
நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் எங்கு எப்போது?... வெளியான புது தகவல் title=

ஐயா படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமான நயன் பல ஏற்ற இறக்கங்களை சந்தித்திருக்கிறார். இருப்பினும் தன்னம்பிக்கையாலும், உழைப்பாலும் தற்போது தமிழ் நடிகைகளில் முதலிடத்தில் இருக்கிறார் அவர்.தமிழ் நடிகைகளில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராதான்.

அவரது போராட்ட குணத்திற்காகவே பலர் அவருக்கு ரசிகர்களாக இருக்கும் சூழலில், அதற்கு தகுந்தவாறு அவரும் கதைக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் நடித்துவருகிறார்.

Nayan

இதற்கிடையே நானும் ரௌடிதான் படத்தில் நடித்தபோது அப்படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் காதல் ஏற்பட்டு தற்போது இருவரும் ஒன்றாக இருக்கின்றனர்.

இந்தச் சூழலில் அவருக்கும், விக்னேஷ் சிவனுக்கும் விரைவில் திருமணம் நடக்கவிருக்கிறது. இதனால் நயனும், விக்னேஷ் சிவனும் உற்சாகமாக இருக்கின்றனர். சமீபத்தில்கூட கும்பகோணம் சென்ற நயன் விக்னேஷின் குல தெய்வ கோயிலில் பொங்கல் வைத்து வழிபட்டார்.

மேலும் படிக்க | லோகேஷ் கனகராஜின் ஃபேன்பாய் மொமண்ட் - விக்ரம் ப்ரோமோவுக்கு இணைந்த பஞ்ச தந்திர கூட்டணி

இவர்களது திருமணம் ஜூன் மாதம் முதல் வாரத்தில் திருப்பதியில் நடக்கவிருப்பதாகவும், இதற்கான ஏற்பாடுகளில் இருவரும் மும்முரமாக ஈடுபட்டிருப்பதாகவும் கூறப்பட்டது.

Nayan

இந்நிலையில் நயன் - விக்னேஷ் சிவன் திருமணம் குறித்த புதிய தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, இருவரின் திருமணமும் சென்னை மகாபலிபுரத்தில் நடக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

திருப்பதியில் 150 பேர்வரை கலந்துகொள்ள கோயில் நிர்வாகம் அனுமதி அளிக்காததால்தான் மகாபலிபுரத்தில் திருமணம் செய்யவிருப்பதாக தெரிகிறது.

மேலும் படிக்க | எஸ்.ஜே. சூர்யா-வுக்கு இந்த கோடிகள் வரி பாக்கியா ? எச்சரித்த நீதிமன்றம்!

ஜூன் 9ஆம் தேதி நடக்கவிருக்கும் திருமண நிகழ்வை தனியார் ஓடிடி நிறுவனம் வெளியிட இருப்பதாகவும் கோடம்பாக்கத்தில் பேச்சு எழுந்திருக்கிறது.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News