தமிழ்நாட்டில் மீண்டும் வைகை புயல்... நாய் சேகர் வடிவேலு டிசம்பரில் ரிட்டர்ன்ஸ்

வைகை புயல் வடிவேலு நடித்திருக்கும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் ரிலீஸ் தேதி தெரியவந்திருக்கிறது.

Written by - க. விக்ரம் | Last Updated : Nov 25, 2022, 09:22 PM IST
  • நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் ரிலீஸ் தேதி
  • லைகா அதிகாரப்பூர்வ அறிவிப்பு
  • வைகை புயலை காண ரசிகர்கள் ஆவல்
தமிழ்நாட்டில் மீண்டும் வைகை புயல்... நாய் சேகர் வடிவேலு டிசம்பரில் ரிட்டர்ன்ஸ் title=

90களிலிருந்து அடுத்த 20 வருடங்கள் வடிவேலு இல்லாத படங்களே இல்லை. சூப்பர் ஸ்டார் ரஜினியேக்கூட சந்திரமுகி படம் ஆரம்பிக்கும்போது  முதலில் வடிவேலுவின் கால்ஷீட்டை வாங்க வேண்டுமென்பதில் தீவிரமாக இருந்தார். அந்த அளவு வடிவேலு பிஸி. வடிவேலு யாருடன் நடித்தாலும் அந்த காம்போ அதிரிபுதிரி ஹிட்டடித்தது, ஹிட் அடித்துக்கொண்டிருக்கிறது .இப்படி சென்றுகொண்டிருர்ந்த வடிவேலு கதாநாயகனாக அறிமுகமாகி மற்ற காமெடியன்களும் கதாநாயகனாக ஜெயிக்கலாம் என்ற விதையையும் போட்டார்.

இப்படி அசுர வேகத்தில் சுழற்றியடித்த வைகை புயல் அரசியலால் வலு குறைந்து ஒருகட்டத்தில் திரையில் காணாமலே போனது. இருந்தாலும் அனைத்து வீடுகளின் டிவிக்களிலும், அனைவரின் ஸ்மார்ட் ஃபோன்களிலும் வைகை புயலே வீசியது. அப்போதுதான் பலரும் புரிந்துகொண்டனர் வடிவேலு என்ற கலைஞனுக்கு அழிவே இல்லை என்று. அதன் பிறகு சில பிரச்னைகளால் ஒதுங்கியிருந்த வடிவேலு மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அந்த வகையில் வடிவேலு தற்போது நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படத்தில் நடித்திருக்கிறார். 

தலைநகரம், மருதமலை என எவர்க்ரீன் காமெடிகளை வாங்கிய சுராஜ் படத்தை இயக்க சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தின் அப்பத்தா பாடல் சமீபத்தில் வெளியாகி வைரலானது. அந்தப் பாடலுக்கு பிரபுதேவா கோரியோக்ராஃபி செய்திருந்தார். வடிவேலு பாடியிருந்தார்.

இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி தற்போது தெரியவந்திருக்கிறது. அதன்படி படமானது டிசம்பர் 9ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை லைகா நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.

மேலும் படிக்க | சலாம் ரஹ்மான் பாய்... மும்பையில் பிரமித்த ஐஸ்வர்யா

மேலும் படிக்க | பிக்பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறப்போகும் போட்டியாளர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News