தென்னிந்தியாவை இணைக்கிறாரா ரஜினி... ஜெயிலரில் மற்றொரு சூப்பர் ஸ்டார்!

Jailer Movie Update : ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தில் மற்றொரு சூப்பர் ஸ்டார் இணைய உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி வருகிறது.  

Written by - Sudharsan G | Last Updated : Jan 6, 2023, 12:35 PM IST
  • ஜெயிலர் படத்தின் அதிகாரப்பூர்வமற்ற அப்டேட் ஒன்று வந்துள்ளது.
  • ஜெயிலர் படத்தில் ஏற்கெனவே கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடிக்கிறார்.
தென்னிந்தியாவை இணைக்கிறாரா ரஜினி... ஜெயிலரில் மற்றொரு சூப்பர் ஸ்டார்! title=

சிவா இயக்கத்தில் ரஜினி நடித்த அண்ணாத்த படம் தோல்வியை தழுவியது. இதையடுத்து, ரஜினி டாக்டர், பீஸ்ட் படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடித்து வருகிறார். டாக்டர் படம் வெற்றியடைந்த நிலையில், பீஸ்ட் படம் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பை பெறவில்லை. மாறாக கடும் விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டது.

இதனால், ரஜினி படத்தில் இருந்து நெல்சன் வெளியேற வாய்ப்புள்ளது என தகவல் வெளியான நிலையில், அதனை பொய்யாக்கும் விதமாக படத்தின் பெயர் வெளியிடப்பட்டு, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது. ஜெயிலர் என பெயரிடப்பட்ட இப்படத்தின் சிறப்பு கிளிம்ப்ஸ் காட்சிகள் ரஜினியின் பிறந்தநாளான டிச. 12ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. 

ஜெயிலர் படத்தில் ரஜினி மட்டுமின்றி, படையாப்பாவில் நீலாம்பரியாக அவருடன் போட்டிபோட்டு நடித்த ரம்யா கிருஷ்ணனும் நடித்துள்ளார். மேலும், கன்னட நடிகர் சிவராஜ்குமாரும் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, யோகி பாபு, பிரியங்கா மோகன் ஆகியோர் படத்தில் நடித்து வந்த நிலையில், இப்படத்தின் அப்டேட்கள் ஏதும் வெளிவராத நிலையில், தற்போது புதிய தகவல் வெளியாகி உள்ளது. 

மேலும் படிக்க | கர்ப்பமாக இருக்கும் நடிகை, தலைக்கீழாக நின்று யோகாசனம்: வீடியோ வைரல்

இந்நிலையில், மலையாள சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான மோகன்லால் இப்படத்தின் மற்றொரு சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே, கன்னட நடிகர் சிவராஜ்குமார் இப்பபடத்தில் நடித்துள்ள நிலையில், மோகன்லாலும் இணைந்தால் படம் பிரம்மாண்ட அளவில் வெளியாகும் என எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. மோகன்லால் நடிக்கும் காட்சிகளின் படப்பிடிப்பு வரும் ஜன. 8, 9ஆம் தேதிகளில் சென்னையில் நடைபெறும் என கூறப்படுகிறது. இதில், ரஜினி, மோகன்லால் இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படலாம் என தெரிகிறது.  

ரஜினி படத்தில் சிறப்பு தோற்றத்திலோ அல்லது முக்கிய கதாபாத்திரங்களிலோ மற்ற மொழியின் சூப்பர் ஸ்டார் அந்தஸ்துள்ள நடிகர்கள் நடிப்பது புதிதில்லை என்றாலும், மோகன்லால், ரஜினியோடு நடிப்பது இதுவே முதல்முறை. 

ரஜினியுடன் இதற்குமுன், சிரஞ்சீவி, மம்மூட்டி, அக்ஷய் குமார், நவாசுதீன் சித்திக் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த வரிசையில் தற்போது லால் ஏட்டனும் இணைந்திருப்பது ரசிகர்களை குதுகலமடைய செய்துள்ளது. இந்தி, தெலுங்கு உள்ளிட்ட படங்களில் இவ் 

இருவர், சிறைச்சாலை, உன்னைப்போல் ஒருவன், அரண், ஜில்லா, காப்பான் உள்ளிட்ட தமிழ் படங்களில் மோகன்லால் நடித்துள்ளார். குறிப்பாக, கமல் உடன் உன்னைப்போல் ஒருவனுக்கு பிறகு ரஜினியுடனும் இணைந்து பணியாற்ற உள்ளார். ரஜினிகாந்தின் மிகப்பெரிய வெற்றி படங்களில் ஒன்றான சந்திரமுகி, மோகன்லால் நடித்த மணிசித்திரதாலு படத்தின் மறு ஆக்கம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | Trademark சிரிப்புடன் ரஜினி... ரசிகர்கள் ஹேப்பி - போய்ஸ் கார்டனில் புத்தாண்டு சந்திப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News