இந்த ஜென்மத்துல கல்யாணம் பண்ணிக்க போறதில்லை: 'Miss Shetty Mr Polishetty' டீசர்

அனுஷ்கா தற்போது ஒரு புதிய படத்தில் செஃப் ஆக நடித்து வருகிறார். இது குறித்து போஸ்டர்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது, மேலும் இந்த படத்தின் டீசர் வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 30, 2023, 12:22 PM IST
  • மூன்று ஆண்டுகள் கழித்து அனுஷ்கா நடிக்கும் படம்.
  • இந்த படத்தின் டீசர் வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
  • இந்தப் படத்தின் கதை ரொமான்டிக் காமெடி ஜானரில் இருக்கலாம்.
இந்த ஜென்மத்துல கல்யாணம் பண்ணிக்க போறதில்லை: 'Miss Shetty Mr Polishetty' டீசர் title=

தமிழ், தெலுங்கு உட்பட பல மொழிகளில் நடித்து டாப் ஹீரோயினாக இருப்பவர் நடிகை அனுஷ்கா ஷெட்டி. இவர் மூன்று தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் , இரண்டு நந்தி விருதுகள் , இரண்டு SIIMA விருதுகள் மற்றும் ஒரு தமிழ்நாடு மாநில திரைப்பட விருது ஆகியவற்றைப் பெற்றவர். 47 படங்களில் தோன்றிய அவர், அதிக சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகைகளில் ஒருவர் இவராவார். மேலும் தென்னிந்திய சினிமாவின் "சூப்பர் ஸ்டார்" என்று பிரபலமாக இவர் குறிப்பிடப்படுகிறார்.

அவர் 2005 ஆம் ஆண்டு தெலுங்குத் திரைப்படமான சூப்பர் மூலம் அறிமுகமானார், இது அவருக்கு பிலிம்பேர் சிறந்த துணை நடிகைக்கான - தெலுங்கு பரிந்துரையைப் பெற்றது. பின்னர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் பிளாக்பஸ்டர் ஹிட் விக்ரமார்குடுவில் நடித்தார். தொடர்ந்து படங்களில் நடித்து வந்த அவர் கடந்த 2009 ஆம் ஆண்டில், அனுஷ்கா ஷெட்டி அருந்ததியில் நடித்தார் , இது அவருக்கு சிறந்த நடிகைக்கான முதல் பிலிம்பேர் விருது, நந்தி விருதுக்கு வழிவகுத்தது.

மேலும் படிக்க | மாமன்னன் படத்தில் வடிவேலுவின் கதாபாத்திரம் இதுதானா? வெளியான அப்டேட்!

2010 களில், ஷெட்டி தமிழ் சினிமாவில் வேட்டைக்காரன், சிங்கம், சிங்கம் II மற்றும் என்னை அறிந்தால் போன்ற அதிரடித் திரைப்படங்களில் நடித்தார். அதற்போல் வானம், தெய்வ திருமகள் மற்றும் சைஸ் ஜீரோ ஆகிய நாடகங்களில் தனது முன்னணி நடிப்பால் விமர்சகர்களிடமிருந்து தொடர்ந்து பாராட்டைப் பெற்றார். சமீபத்தில் பாகுபலி படத்தின் மூலம் இவர் இந்திய அளவில் புகழ் பெற்ற நடிகையாக மாறினார். தமிழில் பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து பல ஹிட் படங்களை அளித்துள்ள நடிகை அனுஷ்கா ஷெட்டி தற்போது மிஸ் ஷெட்டி மற்றும் மிஸ்டர் பொலிஷெட்டி என்கிற படத்தில் நடித்து வருகிறார். 

கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான ’சைலன்ஸ்’ திரைப்படத்திற்கு பிறகு மூன்று ஆண்டுகள் கழித்து அனுஷ்கா நடிக்கும் படம் என்பதால் அவரது ரசிகர்கள் மத்தியில் இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு உள்ளது. மேலும் இந்த படத்தில் அனுஷ்கா ஒரு செஃப் ஆக நடித்து வருகிறார். அத்துடன் இதில் நவீன் பொலிஷெட்டி நடித்து வருகிறார் மற்றும் இந்தப் படத்தின் கதை ரொமான்டிக் காமெடி ஜானரில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. மேலும் இந்த படத்தை யூவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. மகேஷ்பாபு இயக்கத்தில் ராதான் இசையில் நீரவ்ஷா ஒளிப்பதிவில் வெங்கடேஸ்வர ராவ் படத்தொகுப்பில் உருவாகி வருகின்றது. அத்துடன் தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளதாகவும் விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | நாளை அஜித்தின் ஏகே 62 அறிவிப்பு? டைட்டில் இது தானா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News