கமர்ஷியல் படங்களின் ராஜாவாக திகழும் திறமைமிக்க இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கும் விஜய் தேவரகொண்டா அவர்களின் முதல் பான் இந்தியா திரைப்படமான “LIGER” படத்தை, ஒவ்வொரு கட்டமாக மெருகேற்றுவதில், எந்த வாய்ப்பையும் தவறவிடாமல் பிரமாண்டமாக உருவாக்கி வருகிறார். மொத்த படக்குழுவிற்கும், ஆக்ஷன் ரசிகர்களுக்கும், மற்ற அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் முக்கியமான படமான இந்த படம் இருக்கும்.
அகிலம் அதிரும்படியான ஒரு அட்டகாச தகவலை LIGER படக்குழு வெளியிட்டுள்ளது. படக்குழு மிகபெருமையுடன் கூறுவது என்னவென்றால், இந்திய திரைப்படங்களில் முதன்முறையாக, உலக அளவில் வரலாறு படைத்த ஒரு நபர், யாராலும் அசைக்கமுடியாத ஜாம்பவான், மைக் டைசன், பெருமைமிக்க பன்மொழி திரைப்படமான LIGER படத்தில் இணைகிறார்.
We promised you Madness!
We are just getting started :)For the first time on Indian Screens. Joining our mass spectacle - #LIGER
The Baddest Man on the Planet
The God of Boxing
The Legend, the Beast, the Greatest of all Time!IRON MIKE TYSON#NamasteTYSON pic.twitter.com/B8urGcv8HR
— Vijay Deverakonda (@TheDeverakonda) September 27, 2021
Mixed Martial Arts நிபுணர் பற்றிய இந்த கதையில், ‘Iron Mike’ எனும் முக்கியமான கதாபாத்திரத்தில், அவர் நடிக்கிறார். இந்த தீவிரமான ஆக்ஷன் கதை, அவரது வரவால் இன்னும் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. மற்றும் இந்திய அளவில் மிகப்பிரமாண்டமான பன்மொழி படமாக இப்படம் மாறியுள்ளது. விஜய் தேவரகொண்டா டிவிட்டர் வாயிலாக இது குறித்து கூறியது, நாங்கள் கொடுத்த வாக்கை, நிறைவேற்ற துவங்கியுள்ளோம். இந்திய திரையுலகில் முதன்முறையாக, LIGER படத்தில் இணையும் முக்கிய பிரபலம். இந்த பிரபஞ்சத்தின் சக்திமிக்க மனிதர், குத்து சண்டையின் கடவுள், லெஜண்ட், பீஸ்ட், காலத்தால் அழிக்கவியலா புகழ் கொண்ட நாயகன் MIKE TYSON. அவர்களை இந்திய திரையுலகிற்கு வரவேற்கிறோம்.
LIGER படத்தில் மேலும் பல வெளிநாட்டு குத்து சண்டை வீரர்கள் நடிக்கின்றனர். இன்னும் சில நாட்களுக்கு , உங்கள் ஆர்வத்தை கட்டுபடுத்தி வைத்துகொள்ளுங்கள். LIGER தியேட்டர்களில் வெளியாக தயாராகி கொண்டிருக்கிறது. கொண்டாட்டத்திற்கு தயாராகுங்கள். அதிரடியான, “இரத்தம் தெறிக்கும் ஆக்ஷன்” சண்டை காட்சிகள், கோவாவில் தற்போது படமாகி கொண்டிருக்கிறது என படக்குழு தெரிவித்துள்ளது.
இந்திய அளவில் பான் இந்தியா திரைப்படமாகவும், உலகப்புகழ் நாயகன் மைக் டைசன் பங்கேற்கும் இப்படத்தினை Puri connects மற்றும் Dharma Productions நிறுவனங்கள் சார்பில் பூரி ஜெகன்நாத், கரண் ஜோகர், சார்மி கவுர், அபூர்வா மேத்தா இணைந்து மிகப்பெரும் பட்ஜெட்டில் மிகப்பிரமாண்டமான படைப்பாக இப்படத்தினை உருவாக்குகின்றனர். மிகப்பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவினை விஷ்ணு சர்மா செய்கிறார். தாய்லாந்தை சேர்ந்த ஸ்டண்ட் கலைஞரான Kecha சண்டை காட்சிகளை வடிவமைத்துள்ளார்.
ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய் மிக முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள். லைகர் (Liger) படம் இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மொழிகளில் உருவாகிறது.
ALSO READ இது நம்ம லிஸ்டுலயே இல்லையே! விஜய்யின் அடுத்த படத்தை இயக்கும் தெலுங்கு இயக்குநர்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR