ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், வெளியான படம், மாமன்னன். இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ், ரவீணா ரவி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சமூக நீதி பேசும் படைப்பாக இத்திரைப்படம் உருவாகியிருந்தது. சமீபத்தில் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியான இப்படம் இந்திய அளவில் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது.
‘மாமன்னன்’ படத்திற்கு வரவேற்பு:
தனித்துவமான இயக்கத்திற்கு பெயர் போனவர் மாரி செல்வராஜ். சாதிய அடக்குமுறைகளையும் அதனுள் இருக்கும் அரசியலையும் எடுத்துக்கூறிய இப்படம் திரையரங்குகளில் வெளியான போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. காமெடி நடிகராக கொண்டாடப்பட்ட வடிவேலு முதன்முறையாக மாறுபட்ட வேடத்தில் மாமன்னனாக இந்த படத்தில் வாழ்ந்திருந்தார். பகத் பாசில் ரத்னவேலு கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். உதயநிதி மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோரும் மக்களுக்காக போராடும் இளைஞர்களின் வேடத்தில் நடத்திருந்தனர். ரசிகர்களிடம் மட்டுமல்லாமல், விமர்சகர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என அனைவரிடமும் இப்படம் பாராட்டுக்களை பெற்றது. ‘மாமன்னன்’ திரைப்படம் ஜூன் மாதம் 29ஆம் தேதியன்று திரைக்கு வந்தது.
மேலும் படிக்க | தமிழகத்திற்கு முன் மற்ற மாநிலங்களில் வெளியாகும் ஜெயிலர்? சோகத்தில் ரசிகர்கள்!
ஓடிடியில் வெளியீடு:
திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் பாராட்டுகளை மாமன்னன் படம் பெற்ற நிலையில், இப்படம் ஜூலை 27 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியானது. வெளியான வேகத்தில், இந்திய அளவில் டிரெண்டிங்கில் நம்பர் 1 இடத்தை பிடித்தது. இந்தியா முழுக்க ரசிகர்கள் இப்படத்திற்கு பெரும் வரவேற்பை அளித்து வருகின்றனர்.
மாமன்னன் படைத்த புதிய சாதனை:
மாமன்னன் திரைப்படம், இந்திய மட்டுமல்லாது, நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் உலகளவிலான டாப் பத்து படங்களில் ஒன்பதாவது இடத்தைப் பிடித்துள்ளது. அதில் மூன்று நாடுகளில் முதலாவது இடத்தையும் அதனுடன் சேர்ந்து ஆறு நாடுகளில் முதல் பத்து இடங்களிலும் இப்படம் இடம் பெற்றுள்ளது. கடந்த வாரத்தில் மட்டும் 1.2 மில்லியன் மக்கள் இத்திரைப்படத்தைப் பார்வையிட்டுள்ளனர். இந்திய ரசிகர்களை கவர்ந்ததோடு உலக சினிமா ரசிகர்களையும் கவர்ந்திழுத்து, இந்திய சினிமா வரலாற்றில் ஓடிடி டிரெண்டிங்கில் புதிய சாதனை படைத்து வருகிறது “மாமன்னன்” திரைப்படம். அது மட்டுமன்றி, நெட்ஃபிளிக்ஸின் டாப் 10 ட்ரெண்டிங்கிள் உள்ள ஒரே இந்தியப்படமும் தமிழ் படமும் ‘மாமன்னன்’ படம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
மாமன்னன் படத்தை இந்தியாவை தவிர வேறு சில உலக நாடுகளிலும் மக்கள் கண்டுகளித்துள்ளனர். பாஹ்ரைன், மலேசியா, மாலத்தீவுகள், ஓமன், கதார், சிங்கப்பூர், இலங்கை மற்றும் துபாய் ஆகிய நாடுகளில் மாமன்னன் படம் ட்ரெண்டிங்கிள் உள்ளது.
‘மாமன்னன்’ வசூல்:
மாமன்னன் திரைப்படம் திரைக்கு வந்து ஒரு மாதத்திற்கு பிறகு ஓடிடியில் வெளியானது. மாரி செல்வராஜ்ஜின் ‘தேவர் மகன்’ படம் குறித்த சர்ச்சை பேச்சால் படத்தின் வசூல் முதல் நாளில் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து படம் இதுவரை திரையரங்குகளில் 52 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக திரை வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது. படம் இன்னமும் சில திரையரங்குகளில் ஓடி வருகிறது.
லோகேஷ் கனகராஜ் விமர்சனம்..!
‘லியாே’ பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மாமன்னன் படத்திற்கு சமீபத்தில் பாராட்டு தெரிவித்திருந்தார். மிகவும் லேட்டாக படம் குறித்த பேசுகிறேன் என்பது தனக்கு தெரியும் என்றும் மாமன்னன் படம் மிகவும் அற்புதமாக இருந்ததாகவும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். மேலும், உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் மற்றும் பகத் பாசில் ஆகியோரது நடிப்பு மனதை கவரும் வகையில் இருந்ததாகவும் மாரி செல்வராஜ்ஜின் இயக்கமும் ஏ.ஆர் ரஹ்மானின் இசையும் தன்னை பெரிதும் ஈர்த்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
மேலும் படிக்க | கவின் திருமணம் செய்து கொள்ள போவது இந்த பெண்ணைத்தான்..! வெளியானது புகைப்படம்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ