கோலிவுட்டில் லோகேஷ் கனகராஜ் மற்றும் நெல்சன் திலீப்குமார் ஆகியோர் லைம் லைட்டில் இருக்கின்றனர். கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படங்களின் வெற்றியைத் தொடர்ந்து விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார் இயக்குநர் நெல்சன் திலீப்குமார். இந்தப் படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸானது. ஆனால், எதிர்பார்ப்புகளையெல்லாம் பொய்யாக்கி, கடும் விமர்சனத்தை எதிர்கொண்டது. கே.ஜி.எப் 2 படத்துக்கு நிகராக பார்க்கப்பட்ட பீஸ்ட் திரைப்படம், விமர்சன ரீதியாக மோசமான படமாக சித்தரிக்கப்பட்டது.
மேலும் படிக்க | ரஜினிக்காக சிவகார்த்திகேயன் செய்யப்போகும் சம்பவம்..! - இந்த தடவையும் ஹிட்தானாம்!
அதேநேரத்தில் கேஜிஎப் 2 படம் கொண்டாடப்பட்டது. தமிழகம் மட்டுமின்றி பாலிவுட் திரைத்துறையிலும் கோலோச்சியது. உலகம் முழுவதும் சுமார் 1000 கோடி ரூபாய் பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்ஷனை பெற்றது. கலெக்ஷன் ரீதியாக தமிழகத்தில் பீஸ்ட் முதலிடம் பிடித்தது. மேலும், இந்தப் படத்தை இயக்கிக் கொண்டிருக்கும்போதே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இயக்கும் வாய்ப்பும் நெல்சன் திலீப்குமாருக்கு கிடைத்தது. அதற்காக 20 கோடி ரூபாய் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாம்.
அதேநேரத்தில் ஒரு படம் கூட தோல்வியடையாமல் இயக்கிக் கொண்டிருக்கும் லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலீப்குமாரைவிட குறைவான சம்பளத்தை பெற்றிருப்பது இப்போது தெரியவந்துள்ளது. அண்மையில் அவரது இயக்கத்தில் ரிலீஸான விக்ரம் திரைப்படம் பாக்ஸ் ஆஃபீஸில் கல்லாக்கட்டியது. தமிழகத்தில் கேஜிஎப் மற்றும் பீஸ்ட் கலெக்ஷனையெல்லாம் ஓரம்கட்டி முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளது. இருப்பினும், இந்தப் படத்துக்கு 12 கோடி ரூபாய் மட்டுமே சம்பளமாக வாங்கினாராம் லோகேஷ் கனகராஜ். அடுத்தடுத்து வெற்றிப் படங்களை இயக்கும் லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலீப்குமாரைவிட குறைவாக ஊதியம் பெறுவது ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க | ’நடிப்பு ராட்சசி’ முன்னாள் கதாநாயகிக்கு புகழாராம் சூட்டிய கமல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR