பீஸ்ட் அப்டேட் கேட்ட லோகேஷ் கனகராஜ்

பிறந்தநாள் வாழ்த்து கூறிய இயக்குநர் நெல்சன் திலிப்குமாரிடம், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பீஸ்ட் அப்டேட் கேட்டுள்ளார். 

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 14, 2022, 08:35 PM IST
  • லோகேஷ் கனகராஜூக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய நெல்சன்
  • நெல்சனிடம் பீஸ்ட் அப்டேட் கேட்ட லோகேஷ் கனகராஜ்
  • இணையத்தில் டிரெண்டிங்காகும் பீஸ்ட் அப்டேட்
பீஸ்ட் அப்டேட் கேட்ட லோகேஷ் கனகராஜ் title=

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இன்று 36வது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். அவருக்கு உலக நாயகன் கமல்ஹாசன், விஜய்சேதுபதி உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். பீஸ்ட் படத்தின் இயக்குநர் நெல்சன் திலிப்குமாரும், லோகேஷ் கனகராஜூக்கு டிவிட்டரில் பிறந்தநாள் வாழ்த்து கூறினார். அந்த வாழ்த்தில், " இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் டியர், இந்த ஆண்டு சிறப்பாக அமையட்டும். விக்ரம் படத்தை பார்க்க மிகுந்த ஆர்வமாக இருக்கிறேன்" எனத் தெரிவித்திருந்தார்.

மேலும் படிக்க | கோலிவுட்டின் டாப் ஹீரோக்கள் படங்களின் ரிலீஸ் தேதி!

அவருடைய வாழ்த்துக்கு ரிப்ளே கொடுத்துள்ள லோகேஷ், " தேங்ஸ் மச்சி, பீஸ்ட் அப்டேட் பிளீஸ்.." எனக் கேட்டுள்ளார். சமூகவலைதளத்தில் லோகேஷ் கேட்ட பீஸ்ட் அப்டேட்  இப்போது தீப்பொறியாக பற்றிக் கொண்டுள்ளது. அவரைத் தொடர்ந்து ரசிகர்கள் பலரும் பீஸ்ட் அப்டேட் கேட்கத் தொடங்கிவிட்டனர். இளையதளபதி விஜய் நடிப்பில், சன்பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் திரைப்படம் பீஸ்ட். அடுத்த மாதம், அதாவது ஏப்ரல் 14 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தப் படத்தில் இருந்து ஏற்கனவே வெளியிடப்பட்ட ‘ அரபிக் குத்து’ பாடல் உலக டிரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளது. யூ டியூப்பில் மட்டும் இதுவரை 173 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனைப் படைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து அடுத்த அப்டேட் எப்போது வரும் என ரசிகர்கள் காத்திருகின்றனர். மார்ச் 20 ஆம் தேதி இசைவெளியீட்டு விழா இருக்கும் என தகவல் வெளியான நிலையில், படக்குழு அதனைப் பற்றி இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. பீஸ்ட் ரிலீஸாகும்போது கே.ஜி.எப் 2 திரைப்படமும் ரிலீஸாக இருப்பதால், படம் திட்டமிட்டப்படி ரிலீஸாகுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இருப்பினும், பீஸ்ட் படத்தின் அப்டேட்டை விரைவில் எதிர்பார்க்கலாம்.

மேலும் படிக்க | ஷமியிடம் ‘பீஸ்ட்’ அப்டேட் கேட்ட ரசிகர்கள்: வைரல் வீடியோ!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News