தனது அடுத்த படத்திற்கான அறிவிப்பை வெளியிட்ட லெஜெண்ட் சரவணன்!

'தி லெஜெண்ட்' படத்தில் லெஜெண்ட் சரவணன் ஒரு விஞ்ஞானியாக நடித்திருக்கிறார்.  

Written by - RK Spark | Last Updated : May 30, 2022, 01:38 PM IST
  • 'தி லெஜெண்ட்' படத்தின் ட்ரைலர் வெளியாகி உள்ளது.
  • சரவணன் ஒரு விஞ்ஞானியாக நடித்திருக்கிறார்.
  • இப்படம் விரைவில் திரையரங்கில் வெளியாக உள்ளது.
தனது அடுத்த படத்திற்கான அறிவிப்பை வெளியிட்ட லெஜெண்ட் சரவணன்! title=

தமிழ்நாட்டின் பிரபல தொழிலதிபரான லெஜண்ட் சரவணன், ' தி லெஜண்ட் ' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார்.  இந்த படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.  'தி லெஜண்ட்' ஆடியோ வெளியீட்டு விழாவில், லெஜண்ட் சரவணன் தான் நிச்சயமாக இரண்டாவதாக ஒரு படத்தில் நடிப்பேன் என்று கூறினார்.  ஊர்வசி ரவுடேலா உட்பட பத்து பிரபல நடிகைகள் இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

legend

மேலும் படிக்க | விக்ரம்: சென்சார்ல கட் ஆன சீன்ஸ் என்னென்ன தெரியுமா?! - இதோ பட்டியல்!

'தி லெஜண்ட்' ஒரு பான் இந்தியா வெளியீடாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.  காதல், நகைச்சுவை, ஆக்‌ஷன் என பல கலவையாக, பல திடீர் திருப்பங்களுடன் உருவாகியுள்ள இந்த படத்தின் மூலம் லெஜண்ட் சரவணன் கலக்க போகிறார்.  லெஜண்ட் சரவணன் இப்படத்தில் விஞ்ஞானியாக நடிக்கிறார், மேலும் அவர் இந்த படத்தின் மூலம் கல்வி முறை குறித்த சோஷியல் மெஸேஜையும் கூறுகிறார்.  இருப்பினும் பட தயாரிப்பு குழு படத்தின் வெளியீட்டு தேதி குறித்து இன்னும் அறிவிக்கவில்லை.

legend

பிரபல இரட்டையர்களான ஜேடி-ஜெர்ரி இயக்கிய 'தி லெஜண்ட்' படத்தில் லெஜண்ட் சரவணனுக்கு ஜோடியாக ஊர்வசி ரவுடேலா நடித்துள்ளார்.  மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் நாசர், பிரபு, யோகி பாபு, ரோபோ சங்கர், சிங்கம் புலி, மயில்சாமி மற்றும் பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.  மூன்று வருட இடைவெளிக்குப் பின்னர் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.  கிட்டத்தட்ட 3 நிமிடங்கள் ஓடும் இந்த ட்ரைலரில் ஆக்சன், செண்டிமென்ட் என அனைத்தும் கலந்த கலவையாக இருந்தது.  

மேலும் படிக்க | ஷங்கர் இயக்கும் ராம் சரண் படத்தின் டைட்டில்! - தலைப்புக்கு இதுதான் ரீஸனா?!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News