‘விடாமுயற்சி’ ஷூட்டிங் தளத்தில் விபத்து! மரண பயத்தில் அஜித்-ஆரவ்! திக் திக் வைரல் வீடியோ..

Vidaa Muyarchi Shooting Accident Viral Video Video : விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங்கில் ஒரு காட்சியை படம்பிடித்த போது நடைப்பெற்ற விபத்தின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.   

Written by - Yuvashree | Last Updated : Apr 4, 2024, 08:27 PM IST
  • அஜித்குமார் நடித்திருக்கும் படம், விடாமுயற்சி
  • இதனை மகிழ் திருமேனி இயக்கியிருக்கிறார்
  • இப்படத்தின் ஷூட்டிங் தளத்தில் விபத்து!
‘விடாமுயற்சி’ ஷூட்டிங் தளத்தில் விபத்து! மரண பயத்தில் அஜித்-ஆரவ்! திக் திக் வைரல் வீடியோ.. title=

Vidaa Muyarchi Shooting Accident Viral Video Video : அஜித்குமார் நடித்து வரும் விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது நடைப்பெற்ற விபத்தின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

விடாமுயற்சி படப்பிடிப்பு தளத்தில் விபத்து..

மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடித்து வரும் படம், விடாமுயற்சி. இந்த படத்தின் படப்பிடிப்பு, அஜர் பைஜானில் சில மாதங்களுக்கு முன்பு நடைப்பெற்றது. அப்போது, கார் ஓட்டும் வகையில் எடுக்கப்பட்டிருந்த ஒரு காட்சியில் நடிகர் அஜித்குமாரும் ஆரவும் விபத்தில் சிக்குவது போன்ற காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. 

இந்த வீடியோவை நடிகர் அஜித்தின் செய்தி தொடர்பாளர் சுரேஷ் சந்திரா வெளியிட்டிருக்கிறார். இதில், அந்த விபத்து நடைப்பெற்றது எப்படி என்ற மூன்று கோண காட்சிகள் இடம் பெற்றுள்ளன. ஒன்று, அஜித்-ஆரவ் பயணிக்கும் காருக்குள் இருக்கும் கேமரா. இன்னொன்று, பறந்து கொண்டே படம் பிடிக்கும் ட்ரோன் கேமரா. இன்னொன்று, லாங் ஷாட் கேமரா. இந்த காட்சி, விடாமுயற்சி படத்தில் வரும் ஒரு காட்சி எனவும், இதற்காக ஸ்டண்ட் கலைஞர்கள் இன்றி, உண்மையாகவே விபத்து நடத்தி காட்சிகள் படமாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த காட்சிகள், கடந்த ஆண்டு (2023) நவம்பர் மாதம் படமாக்கப்பட்டுள்ளன. 

மேலும் படிக்க | நடராஜனுக்கு கேக் ஊட்டிய அஜித்! பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் வைரல்!

ரிஸ்க் எடுக்கும் அஜித்..

ஆபத்தான சண்டை காட்சிகளின் போதும், ஆபத்தான காட்சிகளை படமாக்கும் போதும் தமிழ் திரைப்பட நடிகர்கள் பலர் ஸ்டண்ட் டபுள் வைத்துக்கொள்வர். தமிழ் திரையுலகில் மட்டுமல்ல, ஹாலிவுட்டிலும் கூட பல பிரபல நடிகர்களுக்கு ‘டூப்’ போடுபவர்கள் உள்ளனர். ஹாலிவுட் டாம் க்ரூஸ்தான், எவ்வளவு ஆபத்தான காட்சியாக இருந்தாலும், அதில் டூப் இல்லாமல் தானே நடிப்பார். ஆனால், தமிழ் திரையுலகை பொருத்தவரை, ஒரு சில நடிகர்கள் ஆபத்தான காட்சிகளில் ஸ்டண்ட் கலைஞர்கள் இல்லாமல் நடிப்பர். அப்படி ரிஸ்க் எடுத்து நடிக்கும் நாயகர்களுள் ஒருவர், அஜித்குமார். மங்காத்தா படத்தில் வரும் ஆபத்தான் பைக் சேசிங் காட்சி உள்பட பல படங்களின் சண்டை காட்சிகளில் டபுள்ஸ் இல்லாமல் நடித்திருக்கிறார். அந்த வகையில்தான் தற்போது விடாமுயற்சி படத்தின் விபத்து காட்சியிலும் நடித்திருக்கிறார். இவர் மட்டுமல்ல, இவருடன் கழுத்தில் ரத்தத்தோடு பயணம் செய்பவராக ஆரவ் நடித்திருக்கிறார். இவரது தைரியமும் பாராட்டுக்குறியது என ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர். 

ரசிகர்கள் அதிர்ச்சி...

விடாமுயற்சி படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி, கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிவிட்டது. இதற்கடுத்து அறிவிப்பை வெளியிட்ட படங்கள் எல்லாம் அவ்வப்போது போஸ்டர் அல்லது ஃபர்ஸ்ட் லுக்கை அப்டேட்டாக வெளியிட்டு வருகின்றன. ஆனால், விடமுயற்சி படத்தின் படப்பிடிப்பு நடைபெறுவதையும், அதில் அஜித்குமார் கலந்து கொள்வதையும் ஏதாவது லீக்கான போட்டோக்களை வைத்துதான் தெரிந்து கொள்ள வேண்டியதாக இருக்கிறது. இதனால் கடுப்பான ரசிகர்கள், “ஒரு அப்டேட்டாச்சு விடுங்கய்யா..” என ட்விட்டர் எக்ஸ் தளத்தில் கதறி வந்தனர். இந்த நிலையில்தான் சுரேஷ் சந்திரா இப்பதிவை வெளியிட்டார்.  ரசிகர்கள் இதற்கும், “ஒரு அப்டேட் கேட்டா, இப்படியா ஷாக் கொடுப்பீங்க..” என்று அதிர்ந்து போய் தங்களது கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். 

மேலும் படிக்க | Aparna Das : மஞ்சுமெல் பாய்ஸ் நடிகரை கரம் பிடிக்கும் அபர்ணா தாஸ்! காதல் மலர்ந்தது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News