தி கோட் டிரைலர்: சம்பவம் செய்த வெங்கட் பிரபு! ரசிகர்களின் ரியாக்‌ஷன் என்ன?

Latest News The GOAT Movie Trailer : விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் GOAT திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி இருக்கிறது. டிரைலர் எப்படியிருக்கு? இங்கு பார்ப்போம்.  

Written by - Yuvashree | Last Updated : Aug 17, 2024, 05:22 PM IST
  • தி கோட் படத்தின் டிரைலர் வெளியீடு
  • இரட்டை வேடத்தில் விஜய்
  • டிரைலர் எப்படியிருக்கு?
தி கோட் டிரைலர்: சம்பவம் செய்த வெங்கட் பிரபு! ரசிகர்களின் ரியாக்‌ஷன் என்ன?  title=

Latest News The GOAT Movie Trailer : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர், நடிகர் விஜய். இவர் நடிப்பில் தி கோட் திரைப்படம் உருவாகியருக்கிறது. இதனை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். 

தி கோட் டிரைலர்:

The Greatest Of All Time படம் விரைவில் வெளியாக இருப்பதை தொடர்ந்து, இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 நிமிடம் 45 வினாடிகள் இருக்கும் இந்த டிரைலர் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. 

இரட்டை வேடங்களில் விஜய்..

நடிகர் விஜய், இதற்கு முன்னர் பல படங்களில் இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். தந்தை-மகன், அண்ணன் தம்பி என்று நடித்து வந்த இவர், தி கோட் திரைப்படத்திலும் இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார். அதில் ஒன்று, மகன் விஜய் கதாப்பாத்திரமாக இருக்கிறது. ஒரு விஜய், நடுத்தர வயது உடையவராகவும் இன்னொரு விஜய் இளம் வயது நிறைந்த கேரக்டராகவும் இருக்கிறது. இதில், இளமையான விஜய்க்கு டீ-ஏஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்த பட்டிருக்கிறது. இதைப்பார்த்த ரசிகர்கள், விஜய் சாதாராணமாகவே பார்ப்பதற்கு கொஞ்சம் இளமையாக இருப்பதாகவும் இப்போது இந்த டீ-ஏஜிங் எல்லாம் செய்து ஏன் இப்படி கொடுமை படுத்தியிருக்கிறீர்கள்? என்றும் கேள்வி எழுப்பி இருக்கின்றனர். 

மேலும் படிக்க | கோட் பாடல்: பவதாரிணியின் ஏஐ குரலில் பாடல் உருவானது எப்படி?

அஜித் டைலாக்..கில்லி ரெஃபரன்ஸ்:

வெங்கட் பிரபு, அஜித்தின் டைலாக்கான “இனிமே சத்தியமா குடிக்கவே கூடாது...” என்ற மங்காத்தா பட டைலாக்கை பேசியிருக்கிறார். வெங்கட் பிரபு, அஜித்தின் ரசிகர் என்பது அனைவருக்கும் தெரியும். அந்த வகையில், அவரது டைலாக்கை விஜய்யை வைத்தே பேச வைத்திருக்கிறார். இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அது மட்டுன்றி, கில்லி படத்தில் அவர் பாடிய “மருதமலை மாமனியே முருகைய்யா..” ரெஃபரன்ஸும் இதில் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இதுவும் ரசிகர்களை குஷிப்படுத்தியிருக்கிறது. 

தி கோட் பட நடிகர்கள்:

தி கோட் திரைப்படத்தில் ஒரு பெரிய நடிகர் பட்டாளமே நடித்துள்ளது. குறிப்பாக, பல ஆண்டுகளுக்கு முன்னர் பிரபல ஹீரோவாக இருந்த மைக் மோகன், கோட் திரைப்படம் மூலம் கம்-பேக் கொடுக்க இருக்கிறார். இதில் இவர் வில்லனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதே போல நடிகர் பிரசாந்தும் இதில் விஜய்யுடன் இணைந்து நடித்திருக்கிறார். இவர்கள் அன்றி, பிரபு தேவா, அஜ்மல், பிரேம்ஜி, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். மீனாட்சி சௌத்ரி ஒரு விஜய்க்கு ஜோடியாகவும், சினேகா இன்னொரு விஜய்க்கு ஜோடியாகவும் நடித்திருக்கின்றனர். நடிகை லைலாவும் முக்கிய கதாப்பாத்திரமாக வருகிறார். 

ரிலீஸ் எப்போது?

இந்த வருடத்தின் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, வரும் செப்டம்பர் 5ஆம் தேதி தி கோட் படம் வெளியாக இருக்கிறது. டிரைலர், ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளதை தொடர்ந்து ரிலீஸிற்காக அனைவரும் காத்துக்கொண்டிருக்கின்றனர். 

மேலும் படிக்க | விஜய்யின் ‘தி கோட்’ படத்தில் பல சர்ப்ரைஸ் கேமியோ கேரக்டர்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News