அல்லு அர்ஜுனுக்கு பதில் ‘அந்த’ ஹீரோ! மாஸ் ப்ளான் போட்ட அட்லீ! யார் அந்த நாயகன்?

Atlee Movie With Allu Arjun : இயக்குநர் அட்லீ, அல்லு அர்ஜுனை வைத்து ஒரு படத்தை இயக்க இருந்ததை தொடர்ந்து தற்போது அப்படம் டிராப் ஆகி விட்டதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.   

Written by - Yuvashree | Last Updated : Jun 17, 2024, 04:32 PM IST
  • அட்லீ-அல்லு அர்ஜுனின் திரைப்படம் டிராப்
  • அதிக சம்பளம் காரணம்..
  • இவருக்கு பதில் அவர்..
அல்லு அர்ஜுனுக்கு பதில் ‘அந்த’ ஹீரோ! மாஸ் ப்ளான் போட்ட அட்லீ! யார் அந்த நாயகன்? title=

Atlee Movie With Allu Arjun : தமிழ் திரையுலகில் டாப் இயக்குநராக இருப்பவர், அட்லீ. ஜவான் படம் மூலம் பாலிவுட் திரையுலகிற்குள் நுழைந்த இவர், அங்கேயே தங்கி விடலாம் என்று முடிவு செய்திருக்கிறார். அவர், அல்லு அர்ஜுனை வைத்து ஒரு படத்தை இயக்க இருந்தார், தற்போது அப்படத்தில் வேறு ஒரு ஹீரோ கமிட் ஆகி இருக்கிறாராம். 

அட்லீ இயக்கிய படங்கள்..

தமிழ் திரையுலகில் வெகு சில படங்களையே இயக்கி இருந்தாலும், வெகு விரைவில் டாப் இயக்குநராக மாறியவர் அட்லீ. பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரிடம் எந்திரன் மற்றும் நண்பன் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய இவர், ராஜா ராணி படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இவரும், நடிகர் சிவகார்த்திகேயனும் நண்பர்கள். அவரது பரிந்துரையில்தான் தனக்கு முதல் படத்திற்கு தயாரிப்பாளர் கிடைத்ததாக அட்லீயே ஒரு விழாவில் பேசியிருக்கிறார்.

காதல் கதை மூலம் ட்ரையல்ஸ் பார்த்த அட்லீ, அடுத்து வந்ததது கமர்ஷியல் களத்திற்குதான். தமிழில் இயக்கியதே 4 படம்தான். அதிலும் மூன்று படத்தை நடிகர் விஜய்யை வைத்து இயக்கினார். தெறி, மெர்சல் மற்றும் பிகில் ஆகிய படங்கள் தொடர்ந்து ஹிட் அடிக்க அடுத்ததாக ஷாருக்கானிற்கு குறி வைத்தார்.

பாலிவுட்டில் அறிமுகம்:

அட்லீயை பாலிவுட்டிற்கு அறிமுகம் செய்து வைத்தது, ஜவான் திரைப்படம். இந்த படத்தில் ஹீரோவாக ஷாருக்கான் நடித்திருந்தார். நாயகியாக, நம்ம ஊர் நயன்தாரா நடித்திருந்தார். இப்படம், தமிழ் ரசிகர்கள் பலமுறை பார்த்து புளித்துப்போன கதை என்றாலும் இந்தி திரையுலக ரசிகர்களுக்கு புதிதாக இருந்ததால் சூப்பர் ஹிட் அடித்தது. போதாக்குறைக்கு, இப்படத்திற்கு இசையமைத்தது அனிருத். பாடல்களும் பயங்கர ஹிட் அடிக்க, இப்போது அவரும் பாலிவுட்டில் சில பிராஜெக்டுகளில் கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அட்லீ அடுத்து ஒரு பெரிய ஹீரோவை வைத்து டோலிவுட்டில் நுழைய நினைத்தார். அதற்காக அவர் தேர்ந்தெடுத்த நடிகர்தான் அல்லு அர்ஜுன். 

மேலும் படிக்க |  ஷங்கர் மகள் திருமணத்தில் குத்து டான்ஸ் ஆடிய அட்லீ-ரன்வீர் சிங்! வைரல் வீடியோ..

அல்லு அர்ஜுன்-அட்லீ படம்:

அல்லு அர்ஜுன் படத்தின் கதை குறித்த விவாதங்கள் கடந்த சில நாட்களாக நடைப்பெற்று வந்ததாக திரையுலக வட்டாரங்களில் கிசுகிசுக்கப்பட்டது. படம் ஓகே ஆகும் என்று அனைவரும் நினைக்க, தற்போது அதற்கு சாத்தியமில்லாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இப்படம் டிராப் ஆகியிருப்பதாகவும் இதில் ஹீரோவாக நடிக்க இன்னொரு பாலிவுட் டானை அட்லீ இறக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அந்த ஹீராே வேறு யாருமில்லை, நடிகர் சல்மான்கான் தான். 

Atlee SalmanKhan

தயாரிப்பு நிறுவனம்..

சல்மான் கானிடம் அல்லு அர்ஜுனுக்காக தயாரித்து வைத்திருந்த கதையை அட்லீ கூறியிருப்பதாகவும், கதையை கேட்டு விட்டு சல்மான்கான் இதில் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை. 

படம் டிராப்பாக காரணம்?

இயக்குநர் அட்லீ, ஜவான் படத்தை இயக்கிய போது அந்த படத்திற்காக சுமார் ரூ.80 கோடி வரை சம்பளமாக வாங்கியதாக கூறப்படுகிறது. படமும் எதிர்பார்த்தது போலவே 1000 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதால் அட்லீயின் மார்கெட் இன்னும் அதிகமாக உயர்ந்திருக்கிறது. இந்த நிலையில், அல்லு அர்ஜுனை வைத்து அவர் இயக்கும் படத்திற்கு சுமார் 100 கோடியை அவர் சம்பளமாக கேட்டதாகும், அதற்கு தயாரிப்பு நிறுவனம் மறுப்பு தெரிவித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இதனால், இப்படம் டிராப் செய்யப்பட்டிருக்கலாம் என்று கிசுகிசுக்கப்படுகிறது. 

மேலும் படிக்க | Atlee : அட்லீ-அல்லு அர்ஜுன் படம் டிராப்?! காரணம் இதுதான்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News