Aparna Das : ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ பட நடிகரை கரம் பிடிக்கும் அபர்ணா தாஸ்! காதல் மலர்ந்தது எப்படி?

Latest News Actress Aparna Das Marriage : சமீபத்தில் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்த மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படத்தில் நடித்திருந்தவரை, அபர்ணா தாஸ் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்.

Written by - Yuvashree | Last Updated : Apr 4, 2024, 02:03 PM IST
  • தமிழில் வளர்ந்து வரும் கதாநாயகி, அபர்ணா தாஸ்.
  • இவர் மலையாள நடிகரை மணக்க இருக்கிறார்
  • இவர்கள் காதலில் விழுந்தது எப்படி?
Aparna Das : ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ பட நடிகரை கரம் பிடிக்கும் அபர்ணா தாஸ்! காதல் மலர்ந்தது எப்படி? title=

Latest News Actress Aparna Das Marriage : தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் கதாநாயகியாக இருப்பவர், அபர்ணா தாஸ். இவருக்கு திருமணம் என்ற தகவல் வெளிவந்ததில் இருந்து ஒரு தரப்பு ரசிகர்கள் மகிழ்ச்சியிலும், இன்னொரு தரப்பு ரசிகர்கள் சோகத்திலும் உள்ளனர். காரணம், அபர்ணா தாஸ் பல இளம் ரசிகர்களுக்கு க்ரஷ்ஷாக இருந்தார்.

டாடா பட நாயகி அபர்ணா தாஸ்..

கடந்த 2023ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று, ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்த படம், ‘டாடா’. இந்த படத்தில் ஹீரோயினாக நடித்தவர், அபர்ணா தாஸ். இதற்கு முன்னர் நெல்சன் திலீப் குமார் இயக்கியிருந்த ‘பீஸ்ட்’ படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்திருந்தார். டாடா படத்தின் முதல் பாதியில் டீன் ஏஜ் காதலியாகவும், இரண்டாம் பாதியின் க்ளைமேக்ஸில் 4 வயது குழந்தைக்கு தாயாகவும் நடித்திருப்பார். இவரது நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல பாராட்டினை பெற்றது.

மலையாள நடிகரை கரம் பிடிக்கிறார்..

சில நாட்களுக்கு முன்பு வெளியாகி உலகளவில் பெரிய ஹிட் அடித்திருக்கும் படம், மஞ்சுமெல் பாய்ஸ். இந்த படம், கேரளாவை விட தமிழகத்தில் பெரிய அளவில் ஹிட் அடித்து வெற்றி நடை போட்டது. இதில், சுதீஷ் என்ற கதாப்பாத்திரத்தில் தீபக் பரம்பொல் என்பவர் நடித்திருந்தார். மலையாள திரையுலகில் பிரபலமான நடிகராக இருக்கும் இவர் 2010ஆம் ஆண்டில் இருந்து சினிமா உலகில் இருக்கிறார். இவர்தான், நம் அபர்ணா தாஸின் வருங்கால மாப்பிள்ளை என தகவல்கள் பரவி வருகிறது. எனினும், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.

காதல் மலர்ந்தது எப்படி?

அபர்ணா தாஸ், அறிமுகமானது மலையாள திரையுலகில்தான். இவர், 2019ஆம் ஆண்டு, ‘மனோகரம்’ என்ற மலையாள படத்தில் கதாநாயகியாக நடித்தார். இதில், நடிகர் தீபக் பரம்பொல் நடித்திருந்தார். இதில் ஒன்றாக இணைந்து நடித்தபோது இவர்களுக்குள் காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து மலையாள படங்களில் நடித்துக்கொண்டிருந்த அபர்ணா தாஸ், அடுத்து தமிழ் சினிமாவிற்குள் எண்ட்ரி கொடுத்தார். தீபக், இன்னும் மலையாள படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். இவர்கள் காதல் சில வருடங்களாக தொடர்ந்த நிலையில், தற்பாேது திருமணம் நிகழவுள்ளது.

மேலும் படிக்க | நடராஜனுக்கு கேக் ஊட்டிய அஜித்! பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் வைரல்!

நிச்சயதார்த்தம் முடிந்ததா?

அபர்ணா தாஸிற்கும், தீபக் பரம்பொலிற்கும் நிச்சயம் நடைப்பெற்று முடிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அபர்ணா தாஸ், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்ஃபினிட்டி சிம்பிள் ஒன்றை பதிவிட்டிருக்கிறார். கூடவே, ஒரு கருப்பு இதயத்தையும் கேப்ஷனில் இணைத்திருக்கிறார். இதனால், இவர் நிச்சயதார்த்தம் முடிந்ததை குறிக்கிறாரோ, என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஒரு சிலர், அபர்ணாவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

எப்போது திருமணம்?

அபர்ணா தாஸிற்கும்-தீபக் பரம்பொலிற்கும் இம்மாதம் 24ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வைரலாகும் நிச்சயதார்த்த பத்திரிகை:

அபர்ணா தாஸ்-தீபக் பரம்பொலின் நிச்சயதார்த்த பத்திரிகை தற்போது வைரலாகி வருகிறது.

Aparna Das

இந்த பத்திரிகையில், இவர்களுக்கு திருமணம் நடக்க இருக்கும் தேதி, நிச்சயதார்த்தம் நடைபெறும் இடம் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன. 

மேலும் படிக்க | Daniel Balaji: டேனியல் பாலாஜி வில்லனாக நடித்துள்ள கடைசி படம் இதுதான்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News