இளையராஜாவின் பயோப்பிக்கில் கவர்ச்சி பாடல்!? என்னங்க சொல்றீங்க..!

Latest News Ilaiyaraajaa Biopic : இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகி வருவதை தொடர்ந்து, அதில் கவர்ச்சி பாடல் ஒன்று இடம் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.   

Written by - Yuvashree | Last Updated : Jul 1, 2024, 03:51 PM IST
  • இளையராஜாவின் பயோபிக்
  • கவர்ச்சி பாடல் இருப்பதாக தகவல்
  • அருண் மாத்தேஸ்வரன் இயக்குகிறார்
இளையராஜாவின் பயோப்பிக்கில் கவர்ச்சி பாடல்!? என்னங்க சொல்றீங்க..!  title=

Latest News Ilaiyaraajaa Biopic : தமிழ் திரையுலகின் ஜாம்பவான் இசைக்கலைஞர்களுள் ஒருவராக விளங்குபவர் இளையராஜா. 81 வயதாகும் இவரது சினிமா பயணத்தை பயாேபிக்காக மாற்றும் பணிகள் நடைப்பெற்று வருகின்றன. அதில் கவர்ச்சி பாடல் ஒன்று இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது.

இளையராஜாவின் பயோபிக்:

உலகம் முழுவதும் பல கோடி இசை ரசிகர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்பவர், ‘இசைஞானி’ இளையராஜா. அன்னக்கிளி படம் மூலம் திரையுலகிற்குள் நுழைந்த இவர், அந்த படத்தின் பாடல்களையும் இசையையும் ஹிட் ஆக்கியதாேடு மட்டுமன்றி, தொடர்ந்து தான் இசையமைத்த படங்களையெல்லாம் தனது பாடல்கள் மூலம் ஹிட்டாக்கினார். பண்ணை புரத்தில் இருந்து வந்த ஒரு இளைஞன், சினிமாவில் இவ்வளவு பெரிய சிகரத்தை எட்டுவார் என்பதை யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை. 

இளையராஜாவின் பாட்டிற்காகவே ஒரு காலத்தில் அவர் இசையமைத்திருந்த படங்கள் ஓடிக்கொண்டிருந்தன. இளையராஜா மட்டுமன்றி, அவரது சகோதரர், மகன்கள், மகள், சகோதரனின் பிள்ளைகள் என அனைவருமே திரையுலகிளும் இசையுலகிலும் பிரபலமானவர்களாக இருக்கின்றனர். இந்த நிலையில்தான், இளையராஜாவின் பயோபிக் உருவாவதாக அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. 

வளர்ந்து வரும் இயக்குநர் அருண் மாத்தேஸ்வரன்..

கோலிவுட்டில் வளர்ந்து வரும் இயக்குநர்களுள் ஒருவராக இருப்பவர் அருண் மாத்தேஸ்வரன். சானி காயிதம் படத்தை இயக்கி அறிமுகமான இவர், அடுத்து நடிகர் தனுஷை வைத்து கேப்டன் மில்லர் படத்தை இயக்கினார். பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருந்த இந்த படம், வெளியான பின்பு நெகடிவ் விமர்சனங்களையே பெற்றது. 

இதையடுத்து, இவர் கையில்தான் அடுத்து இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படத்தை இயக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டது. இவர், இதனை சரியாக செய்வாரா என பலரும் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், பிறர் பேச்சை கேட்காமல் தனக்கு சரி என்று தோன்றும் வகையில் இயக்குநர் படத்தை எடுக்க வேண்டும் என்று அட்வைஸ் கொடுத்தார். 

ஹீரோவாக தனுஷ்..

இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் அவரது கதாப்பாத்திரத்தில் நடிகர் தனுஷ் நடிக்கிறார். சில வருடங்களுக்கு முன்னர் ஒரு நேர்காணலில் தனக்கு ரஜினி அல்லது இளையராஜாவின் பயோபிக்கில் நடிக்க ஆசை என்று கூறிய அவர், தற்போது அதை நடத்தி காண்பித்திருக்கிறார். 

மேலும் படிக்க | இளையராஜா குறித்த கேள்வி - வைரமுத்து கொடுத்த ரியாக்சன்!

கவர்ச்சி பாடல்?

தமிழ் திரையுலகை பொறுத்தவரை, ஒரு சில இயக்குநர்கள் திரைக்கதைக்கு பொருந்தினாலும் இல்லையென்றாலும் ஒரு கவர்ச்சி பாடலை எப்படியேனும் கதையுடன் இணைத்து விடுவர். அப்படி, இளையராஜாவின் பயோபிக்கிலும் அப்படி ஒரு பாடல் இணைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது, இளையராஜாவின் இசையமைப்பில் வெளிவந்த ஏதேனும் பாடலுக்கான காட்சியாகவும் இருக்கலாம் என தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

இளையராஜா மீது மக்களுக்கு இருக்கும் அபிப்ராயம்..

இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை இளசுகள் முதல் பெருசுகள் வரை அனைவருக்கும் பிடிக்கும் ரகம். ஆனால், அவரது குணமோ பலரை பல இடங்களில் மனம் நோகும் படி செய்திருப்பதாக கூறப்படுகிறது. இவர், தான் கலந்து கொண்ட பல்வேறு மேடை நிகழ்ச்சிகளில் பிறரை அவமானப்படுத்தும் தொணியில் பேசும் வீடியோக்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அது மட்டுமன்றி, தன் பாடலை பயன்படுத்தும் அனைவர் மீதும் ‘பதிப்புரிமை’ (Copyrights) புகார் கொடுப்பதும், வேறு யாரும் தனது பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தக்கூடாது என்பதிலும் குறியாக இருக்கிறார். இதுவும் பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்தது. சமீபத்தில் மஞ்சுமெல் பாய்ஸ் மற்றும் கூலி படக்குழுவினர் இந்த பிரச்சனையை சந்தித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | இளையராஜா பிறந்தநாள்: இளையராஜா பயோபிக் போஸ்டர் வெளியீடு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News