தலைவர் 168: கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு அடுத்து நயன்தாராவும் இணைந்தார்

தர்பார் படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாகவும், மீண்டும் நான்காவது முறையாக நயன்தாரா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைக்கிறார்.

Written by - Shiva Murugesan | Last Updated : Jan 31, 2020, 11:09 PM IST
தலைவர் 168: கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு அடுத்து நயன்தாராவும் இணைந்தார் title=

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 168 படத்தில் நடிக்க உள்ள நடிகர்கள் குறித்து செய்திகள் இன்னும் வெளியாகி வருகின்றன. தற்போது லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இணைந்துள்ளார். ரஜினிகாந்த் தனது 168 வது படத்திற்காக விஸ்வாசம் இயக்குனர் சிறுத்தை சிவா உடன் கைகோர்த்துள்ளார். இப்படம் கிராமப்புற பொழுதுபோக்கு அம்சமாக எடுக்கப்பட உள்ளது என கூறப்படுகிறது. நடிகர் விஜய்யின் "சர்க்கார்" படத்தை அடுத்து சன் பிக்சர்ஸ் நிறுவனத்தால் "தலைவர் 168" படம் மிகப்பெரிய அளவில் தயாரிக்கப்பட உள்ளது.

தலைவர் 168 படத்தில் கீர்த்தி சுரேஷ், மீனா மற்றும் குஷ்பு ஆகியோர் ஒப்பந்தம் ஆகியுள்ளனர். இதுக்குறித்து தகவலை கடந்த ஆண்டும் நவம்பர் 10 ஆம் தேதி படக்குழு அறிவித்தது. 

 

இந்நிலையில் "தலைவர் 168" படத்தில் நடிகை நயன்தாரா இணைந்துள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இதன் மூலம் தர்பார் படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாகவும், மீண்டும் நான்காவது முறையாக நயன்தாரா இணைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Trending News