கேஜிஎஃப்: அத்தியாயம் 2 அட்வான்ஸ் புக்கிங்: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கேஜிஎஃப்: அத்தியாயம் 2 படத்தின் முன்பதிவு நேற்று (வியாழன்) மதியம் வரையறுக்கப்பட்ட சில மையங்களில் தொடங்கப்பட்டது. ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த ரசிகர்கள் 'கே.ஜி.எஃப்: அத்தியாயம் 2' படத்தின் முன்பதிவு துவங்கியதும் அதற்கு கிடைத்த வரவேற்பை வைத்தே படத்தின் மீதான எதிர்பார்ப்பை மதிப்பிட முடியும். 12 மணி நேரத்திற்குள், கேஜிஎஃப்: அத்தியாயம் 2 ஹிந்தி பேசும் மாநிலங்களில் தோராயமாக 1.07 லட்சம் டிக்கெட்டுகளை விற்று தீர்ந்தது. மொத்தமாக ரூ. 3.35 கோடி (நிகரமாக ரூ. 2.83 கோடி) வசூலித்துள்ளது.
தென் இந்தியா திரைப் படங்களின் மோகம் வட இந்தியா பார்வையாளர்களிடையே அதிகரித்து வருகிறது. சமீபத்தில் புஷ்பா, ஆர்ஆர்ஆர் போன்ற படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வசூலை வாரி குவித்தது.
அதிக டிக்கெட்டுகள் எங்கே விற்பனை ஆனது?
நாட்டின் தலைநகரான டெல்லியில் படத்தின் முன்பதிவு டிக்கெட்டு அதிகம் விற்பனையாகி உள்ளது. கேஜிஎஃப்: அத்தியாயம் 2 படத்தின் டிக்கெட் முன்பதிவு ரூ.75 லட்சத்தை ஈட்டியது. இதையடுத்து மும்பையில் ரூ.60 லட்சம் மதிப்பிலான முன்பதிவு டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. வெறும் 12 மணி நேரத்தில், புனே, சூரத், அகமதாபாத், கொல்கத்தா, ஜெய்ப்பூர் மற்றும் லக்னோ போன்ற நகரங்களில் டிக்கெட் விற்பனையில் படம் தலா ரூ.10 லட்சம் வசூலித்தது.
மேலும் படிக்க: பற்றி எரியும் Beast VS KGF-2: விஜய் குறித்து என்ன சொன்னார் யஷ்?!
தற்போது சில நகரங்களில் மட்டும் சிறப்பு காட்சிகளுக்கான முன்பதிவு மட்டுமே தொடங்கியுள்ளது என்றும், கேஜிஎஃப்: அத்தியாயம் 2 படத்தின் முன்பதிவு வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் முழுமையாகத் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
RRR சாதனையை இப்படம் முறியடிக்குமா?
சமீபத்திய ரிலீஸ் ஆனா எஸ்எஸ் ராஜமௌலியின் "ஆர்ஆர்ஆர்" படம் முன்பதிவு மூலம் ரூ.5.08 கோடியை ஈட்டியது. கேஜிஎஃப்: அத்தியாயம் 2 படம் ஒரே நாளில் ரூ.3.35 கோடியை ஈட்டியது. படம் வெளிவர இன்னும் ஒரு வாரம் உள்ளது என்பது தெரிந்ததே.
மேலும் படிக்க: மொழிக்கும், உணர்வுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் - கேஜிஎஃப் யஷ்
"ஆர்ஆர்ஆர்" படம் 3788 காட்சிகளுக்கான முன்பதிவு டிக்கெட் மூலம் சம்பாதித்தாலும், KGF: அத்தியாயம் 2 இன் முன்பதிவு 1839 காட்சிகளுக்கான டிக்கெட் மட்டுமே விற்பனை செய்யப்பட்டது.
இந்தி பெல்ட் வாட்டாரங்கள் மூலம் புதன்கிழமை (ஏப்ரல் 13) அன்று மட்டும் கேஜிஎஃப்: அத்தியாயம் 2 படம் வழக்கமான டிக்கெட் முன்பதிவு மூலம் ரூ 15 முதல் 17 கோடி வரை வசூலிக்கும் என்று நம்பப்படுகிறது. படத்தின் அட்வான்ஸ் புக்கிங்கில் இருந்து கிடைத்த வரவேற்பை வைத்து இந்த படம் RRR சாதனையை முறியடிக்கும் என எதிர்பார்க்கலாம்.
மேலும் படிக்க: பீஸ்ட் டிரெய்லரை பார்த்த கேஜிஎப் இயக்குனரின் ரியாக்சன்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR