கேரளாவின் 'லைலா-மஜ்னு' திலீப், காவ்யா திருமணம் செய்து கொண்டனர்

மலையாள நடிகர் திலீப்பும் நடிகை காவ்யா மாதவனும் இன்று கொச்சியில் திருமணம் செய்துகொண்டார்கள். 

Last Updated : Nov 25, 2016, 02:41 PM IST
கேரளாவின் 'லைலா-மஜ்னு' திலீப், காவ்யா திருமணம் செய்து கொண்டனர் title=

கொச்சி: மலையாள நடிகர் திலீப்பும் நடிகை காவ்யா மாதவனும் இன்று கொச்சியில் திருமணம் செய்துகொண்டார்கள். 

மம்மூட்டி, ஜெயராம், மீரா ஜாஸ்மின், மேனகா உள்ளிட்ட பல திரையுலகப் பிரபலங்கள் இந்தத் திருமணத்தில் கலந்துகொண்டார்கள். 

இவர்கள் இருவருக்கும் இது இரண்டாவது திருமணம் ஆகும். இதற்கு முன்பு 1998-ம் ஆண்டு நடிகை மஞ்சு வாரியரைத் திருமணம் செய்த திலீப், 2015-ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார். அதேபோல தொழிலதிபர் நிஸ்சால் சந்திராவை 2009-ம் ஆண்டு திருமணம் செய்த காவ்யா, 2010-ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார்.

திலீப்பும் காவ்யாவும் 21 படங்களில் ஒன்றாக நடித்தவர்கள். இந்நிலையில் இன்று இருவரும் திடீர் என திருமணம் செய்துகொண்டுள்ளார்கள். கொச்சியில் உள்ள வேதாந்தா ஓட்டலில் உறவினர்கள், சில நண்பர்கள் முன்னிலையில் இன்று திலீப், காவ்யா மாதவன் திருமணம் நடைபெற்றது.

திருமணத்தில் திலீப்பின் மகளான 16 வயது மீனாட்சி கலந்து கொண்டார். நிகழ்ச்சியின் போது மீனாட்சி தனது தந்தையின் அருகிலேயே இருந்தார். எனக்கு திருமணம் நடந்தால் அது என் மகளின் வாழ்த்துக்களோடு தான் நடக்கும் என திலீப் ஏற்கனவே கூறி இருந்தார்.

Trending News